Saturday, May 28, 2011

சிறை முன்னேற்ற கழகம்? (சி.மு.க)

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா?  என்ற கதை ஆகி விட்டது தமிழின தலைவனின் கதை.  இந்த ஐந்து வருடங்கள் இவர்களுக்கு புலம்பல் வருடமாக மாறிவிட்டது,  
கலைஞர் ஆடிய ஆட்டமும் போட்ட வேசமும் கொஞ்சம் நஞ்சம் அல்ல,  அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எனபது மீண்டும் நிருபிக்க பட்டுள்ளது.  
கலைஞர் காப்பீட்டு திட்டம் இன்று பெயர் மாற்ற படுவதை அறிந்து கோவப்படும் இவர் அன்று அந்த திட்டத்திற்கு தனது குரு, கடவுள் என்று கூறிகொள்ளும் அண்ணா வின் பெயரில் அண்ணா காப்பீட்டு திட்டம் என்று கொண்டு வந்திருந்தாள் யார் அந்த பெயரை மாற்ற போகிறார்கள்?   அரசாங்க திட்டதிருக்கு பெயர் வைப்பதில் கூட சுயநலம்.   
ஏற்கனவே ராஜா, கனிமொழி, என்று அரசியல் சதுரங்க ஆட்டத்தில் முக்கிய காய்களை இழந்துவிட்ட கருணாநிதி மற்றும் அவருடைய சேனைகள் நமக்கு திகார் ஜெயிலா இல்லை புழலா என்று புலம்பி தள்ளுவது தெரிகிறது.  எப்படியோ கூடிய விரைவில் அழகிரிக்கு ஆப்பு காத்து கொண்டு இருக்கிறது.  அதன் பிறகு திராவிட முன்னேட்ற கழகம் சிறை முன்னேட்ற கழகமாக உருவாகும் எனபது நிதர்சனமான உண்மை.
 இவர்களை அடைத்து வைத்திருக்கும் வைக்கபோகும் சிறையில் கூட இவர்கள் ஊழல் செய்ய வாய்ப்புகள் உள்ளன எனவே சிறை நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  
வடிவேலுவை வைத்துதான் பிரசாரம் செய்ய வேண்டும் என்ற ஒரு இழிவான நிலைக்கு தி.மு.க தள்ளப்பட்ட பொழுதே அதன் தோல்வி நிருபிக்க பட்டது.  வடிவேலுவுடன் சேர்ந்து தி.மு.க வும் காமடி பீசாக ஆகிவிட்டது.  இனி தமிழ் நாட்டில் காமடி காட்சிகளுக்கு  பஞ்சம் இருக்காது.  
 எதிரியை குறைத்து மதிப்பிட கூடாது என்பதை  கூட புரியாமல் விஜயகாந்தை பகைத்து கொண்டதற்கு தமிழக மக்கள் உணர்த்திய பாடம் சூப்பெர். 
சரி அதை  விடுங்கள் ரெண்டாவது இடம் கூட வாங்காத சின்ன கட்சிகளை பற்றியெல்லாம் நாம் பேசி ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்.   என்ன,  224 தொகுதியையும் கைப்பற்றுவோம் என்று கூறிய அழகிரியின் நிலமைய நினைத்தால் தான் கொஞ்சம் பாவமாக உள்ளது.  அஞ்சா நெஞ்சன் எங்கு அஞ்சி ஒளிந்து கொண்டாரோ தெரியவில்லையே. 

No comments:

Post a Comment