Tuesday, May 31, 2011

ஆஸ்காருக்கு பணம் கொடுத்தாரா ரஹ்மான்? : கிளம்பியது சர்ச்சை

ஆஸ்கார் விருது பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அந்த விருதை பெற பணம் கொடுத்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆனால் அந்த புகாரை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் ரஹ்மான்.  பாலிவுட் இசையமைப்பாளர்களில் ஒருவரான இஸ்மாயில் தர்பார், சமீபத்தில் நாக்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 2008ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் 2
விருதுகளை வாங்கியதில் சந்தேகமாக உள்ளது. விளம்பரத்துக்காக அவர் பணம் கொடுத்து இந்த விருதுகளை வாங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன். உண்மையிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் திறமை உள்ளவர் என்றால் ரோஜா அல்லது பம்பாய் படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்க வேண்டியதுதானே? அவர் பணம் கொடுத்துதான் விருது வாங்கினார் என்று எனக்குத் தெரியும், என்று குற்றம் சாட்டினார்.

ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டிய இஸ்மாயில் தர்பாருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ஆஸ்கார் விருதுகளை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது. 3 ஆயிரம் மக்களால் விருதுகள் தேர்வு நடக்கிறது. எப்படி பணம் கொடுத்து வாங்க முடியும், என்றார்.(dinamalar)

No comments:

Post a Comment