ஆதரவற்றவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் செலினோ: மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை, சின்ன வயதிலிருந்தே எனக்குள் இருந்தது. என் பெற்றோர், ஆசிரியர்களாக இருந்ததால், நானும் ஆசிரியர் பயிற்சி தான் முடிச்சேன். ஒரு பள்ளியில், ஆசிரியராகவும் வேலை பார்த்தேன். வழக்கமான வாழ்க்கையில் எனக்கு நாட்டம் இல்லாததால், ஜெர்மனுக்கு போய், கன்னியாஸ்திரி பட்டம் முடிச்சுட்டு வந்தேன். என் சொந்த ஊரான தர்மபுரி, பள்ளிப் பட்டியிலேயே, எனக்கு ஆசிரியராக வேலை கிடைத்தது.அப்பதான், என் வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பொண்ணு, கணவனுடன் இருந்த பிரச்னையில், தற்கொலை
செஞ்சுக்க முயற்சி பண்ணுனா. அவளைக் காப்பாத்தி, என் கூட தங்க வைத் தேன். தொடர்ந்து கூடவே வைத்துக் கொள்ள முடியாது என்பதால், ஏதாவது இல்லத்தில், அவளை சேர்த்துவிட முயற்சி செய்தேன்.ஒவ்வொரு இடத்திலும், சில விதிமுறையை பின்பற்றுவது தெரிந்தது. குழந்தைகள் காப்பகத்தில், குழந்தைகளை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றனர்.முதியோர் இல்லங்களில், வயதானவர்கள் மட்டும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், கஷ்டப்படும் பெண்களின் கதி என்னை யோசிக்க வைத்தது.அப்போது தான், விதிமுறைகள் இல்லாத ஒரு காப்பகத்தை உருவாக்க வேண்டும் என நினைத்தேன். அப்படி ஆரம்பித்தது தான் இந்த லோட்டஸ் அமைப்பு. 15 ஆண்டுகளுக்கு முன், 750 ரூபாய் சம்பளம் வாங்கும் போது, வாடகைக்கு ஒரு சின்ன வீடெடுத்து ஆரம்பித்த அமைப்பு இது.யாருக்கு, என்ன பிரச்னை என்றாலும், என்னைத் தேடி வர ஆரம்பித்தனர். அப்படி வருபவர்கள் அதிகமானதால், பணமும் அதிகமாக தேவைப்பட்டது. இரவு, பகல் பாராமல் உழைத்து, கொஞ்சம் பணம் சேர்த்து, சொந்தமாக ஒரு வீடு வாங்கினேன். இன்று, 85 பேருக்கு மேல் குடியிருக்கும் வீடாக மாற்றியுள்ளேன். நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், என்னை நம்பி வந்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

No comments:
Post a Comment