""அரசாங்கம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்,'' என்று கும்பகோணத்தில் நடந்த உள்ளாசித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார்.
தமிழக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நேற்று கும்பகோணம் மகாமகக்குளம் மேல்கரையில், தே.மு.தி.க., நிறுவனத்தலைவர் விஜயகாந்த், நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் கோமதிசிவாவை ஆதரித்து, முரசு சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, திறந்தவேனில் இருந்து பேசியதாவது:நான் கும்பகோணம், மாயவரம், மன்னார்குடி, முத்துப்பேட்டை என, உங்கள் பகுதியிலுள்ள பல ஊர்களை சுற்றிப் பார்த்தவன். தற்போது நான் ஓட்டு கேட்க வந்துள்ளேன்.இன்றைய நிலையில் நாட்டுக்கே உள்துறை மந்திரியாக உள்ள சிதம்பரம், எனக்கு ஞாபகமறதி ஜாஸ்தி என்று சொல்கிறார். இது நாட்டுக்கே அவலம்.ஏழைகளுக்கு கடன் கொடுத்தால், கரெக்டாக வசூல் செய்கின்றனர். பணக்காரர்களுக்கு கடன் கொடுத்தால், கணக்கு தெரியாது என்று சொல்கின்றனர். திரும்ப, திரும்ப செய்கின்ற தப்பால் தான் இதுமாதிரி அரசியல்வாதிகள் உருவாகிறார்கள். நாம் மாடு மாதிரி
ரெண்டு கட்சிக்கும் மாற்றி, மாற்றி ஓட்டு போட்டுகிட்டு யாரும் நல்லவர்களில்லை என்று நம்மை நாமே நொந்து கொள்கிறோம்.உள்ளாட்சி என்றால் என்ன? மாநகரம், நகரம், டவுன் பஞ்.,- பஞ்சாயத்து என, எவ்வளவோ உள்ளது. எல்லாவற்றுக்கும் நம்மிடம் நிதி உள்ளது. இதைத் தவிர குழாய் வரி, சொத்துவரி, மின்சார வரி, பாராளுமன்ற நிதி, சட்டமன்ற நிதி என எவ்வளவோ நிதி உள்ளது. அந்த நிதியை வைத்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.ஆகவே, முரசு சின்னத்துக்கு இந்த முறை ஓட்டு போடுங்கள். அப்போது தான் எங்களை பற்றி தெரியும். விஜயகாந்த் இப்படி கேட்பதனால் மக்களிடம் போய் கெஞ்சுகிறான் என்று சொல்கிறார்கள். பின்னர் மரத்திடம் போயா கெஞ்ச முடியும்.உள்ளாட்சி என்றால் உங்கள் என்று பொருள் எங்கள் கட்சிக்கு ஓட்டு போட்டு வெற்றி பெறச் செய்தால் நன்றாக உழைப்போம்.
படித்த இளைஞர்களுக்கு வேலையை உருவாக்கி கொடுக்க வேண்டும். அரசாங்கம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். நீங்கள் காய்கறி கடைக்குச் சென்று எப்படி பார்த்து, பார்த்து வாங்குகிறீர்களோ, அதேபோல் நீங்கள் ஒட்டு போடுகின்ற வேட்பாளர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.நான் ஆட்சியில் இல்லாத போது தனிப்பட்ட முறையில் மக்களுக்கு தையல் மிஷின் கொடுத்தேன். கம்ப்யூட்டர் கொடுத்தேன். ஏராளமான நிதியை கொடுத்தேன். என்னிடம் ஆட்சியை கொடுத்தால் எப்படி எல்லாருக்கும் கொடுப்பேன் என்பதற்காக இதைச் சொன்னேன்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.(thanks dinamalar)
No comments:
Post a Comment