'திருமங்கலம் பார்முலாவை' இப்போது அதிமுக எடுத்துக் கொண்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கை செலுத்திவிட்டு நிருபர்களிடம் பேசிய அவர்,
தேர்தல் ஆணையம், அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் கைப்பாவையாக,
அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் செயல்படுவது வருந்தத்தக்கது. அதே போல காவல்துறையும் அதிமுகவின் கைப்பாவையாக செயல்படுகிறது.
காசு கொடுத்து ஓட்டு வாங்கும் திமுகவின் 'திருமங்கலம் பார்முலாவை' இப்போது அதிமுக தன் வசம் எடுத்துக் கொண்டுவிட்டது.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக கோருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்துவிட்டு பிறகு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்தில் மத்திய அரசின் நிலை கேலிக்குரியதாக உள்ளது என்றார்.

No comments:
Post a Comment