Thursday, December 1, 2011

ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டதால் என்ன ஆச்சு? விஜயகாந்த் ஆவேசம்


:""தமிழ்நாடே ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டதால் இப்போதைய நிலை என்ன ஆச்சு?'' என விஜயகாந்த் எம்.எல்.ஏ., கேள்வி எழுப்பினார்.
ரிஷிவந்தியம் தொகுதியில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில், தொகுதி எம்.எல்.ஏ., விஜயகாந்த் நேற்று கலந்து கொண்டார். சாலை மேம்பாடு, பஸ் வசதி, சுகாதாரம், குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள், விவசாய அபிவிருத்தி குறித்தும் அவற்றை
மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் அதிகாரிகளிடம் இரண்டரை மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

விஜயகாந்த் அளித்த பேட்டி:சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதும் நன்றி சொல்ல ரிஷிவந்தியம் வந்த நான், பல மாதங்களாக தொகுதி பக்கம் வரவில்லை என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு கட்சியின் தலைவராக இருப்பதால் பல வேலைகள் நெருக்கடியால் வர இயலவில்லை.இருப்பினும், தொகுதியின் நிலவரம் குறித்து தெரிந்து அதைச் சரி செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகிறேன். மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களைப் பரிசீலித்து, அதைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.தொகுதியில் உள்ள நிலவரம் குறித்து, முழுமையாக அதிகாரிகளுடன் ஆலோசித்து, தீர்வு காண இந்த ஆய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. மக்களுக்கு என்ன செய்யப் போகிறேன் என்பதை இப்பவே கூற இயலாது. நான் மூச்சு விட நேரம் தேவை.

ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்கள், மக்களிடமிருந்து வந்த கோரிக்கைகள் முழுமையாக பரிசீலித்து எந்தத் திட்டங்கள் செயல் படுத்தப்படும் என்பதை, வரும் ஜனவரி மாதம் உங்களைச் சந்தித்து பேசுகிறேன். இந்த 5 ஆண்டுகளில் என்ன செய்ய முடியுமோ, அதை நிச்சயம் செய்வேன். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடே ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டார்கள். இப்போது நிலை என்னாச்சு. பால் விலை, பஸ், மின் கட்டணம் உயர்த்தினார்களே. இதை யார் கேள்வி கேட்பது.கொடநாடு போகிறேன் என்று சொல்லிவிட்டு போகாமல் பயணத்தை ரத்து செய்த ஜெ.,வை ஏன் என்று கேள்வி கேட்க முடியுமா.இவ்வாறு விஜயகாந்த் எம்.எல்.ஏ., கூறினார்.(THANKS DINAMALAR)

No comments:

Post a Comment