Thursday, December 1, 2011

'கண்டாங்கி'ச் சேலையில் கலக்கப் போகும் நமீதா!

நமீதாவைப் பார்த்து பல நாட்களாகி விட்டதே என்று ஏங்கிக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. புதுப் படம் ஒன்றில் புக் ஆகியுள்ளார் நமீதா - ஆனால் தமிழில் அல்ல, தெலுங்கில்.

ரமணா மோகிலியின் இயக்கத்தில் ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நமீதா நடிக்கிறார். இதற்கான பூஜையை சமீபத்தில் ஹைதராபாத்தில் போட்டனர். அதில்
நமீதா வழக்கம் போல 'உடை பாதி, உடல் மீதி' என்ற ரேஞ்சுக்கு கவர்ச்சிகரமாக வந்திருந்தார்.

இப்படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் வருகிறாராம் நமீதா. இதன் மூலம் கிராமத்து சேலைக்கட்டில் ஜில்லென்று தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியின்போது நமீதா பேசுகையில், எனக்கு இந்தக் கதையை இயக்குநர் சொன்னபோதே பிடித்துப் போய் விட்டது. இதுவரை கவர்ச்சி பாத்திரங்கள், போலீஸ் என்று நான் செய்துள்ளேன். ஆனால் இந்தப்படத்தில்தான் கிராமத்து பெண் வேடத்தில் வரப் போகிறேன். என்னைச் சுற்றி நடப்பது போல கதையை வைத்துள்ளனர். பெண்களுக்கான படம் இது. ஆக்ஷனும் படத்தில் உண்டு.

எனது திறமையை முழுமையாக வெளிக் கொணரும் வகையிலான கதை இது என்பதால் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.

இந்தப் படத்தை தெலுங்கில் எடுத்தாலும் கூட தமிழிலும் டப் செய்து வெளியிடுவார்கள் என்று நம்புவோமாக...!

No comments:

Post a Comment