Friday, September 30, 2011
Wednesday, September 14, 2011
தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் ஓய்வெடுக்கக் கூடாது : விஜயகாந்த்
""சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த நிலையில், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் ஓய்வெடுக்காமல் தொகுதிக்கு சென்று, மக்கள் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்'' என, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். தே.மு.தி.க., ஏழாம் ஆண்டு துவக்க விழா, அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு வந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு, வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சி கொடியை ஏற்றி வைத்த விஜயகாந்த், அங்கு திரண்டிருந்த கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி ராமச்சந்திரன், சந்திரகுமார், பார்த்தசாரதி, சேகர் உள்ளிட்ட, 28 தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்திற்குபின், எம்.எல்.ஏ.,க்களிடம் பேசிய விஜயகாந்த், "சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததால், எம்.எல்.ஏ.,க்கள் ஓய்வெடுக்கூடாது. தொகுதிக்கு சென்று, மக்கள் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக தான் நம்மை தொகுதி மக்கள் தேர்வு செய்துள்ளனர். அதோடு வரும் 25ம்தேதி கோவையில் நடக்கவுள்ள கட்சி ஆண்டு விழா மற்றும் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகளையும் கவனிக்க வேண்டும். ஆண்டுவிழாவில் கட்சித் தொண்டர்கள் அதிகளவில் பங்கேற்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக காலையில் தனது சாலிகிராமம் வீட்டிலும், கட்சி கொடியை ஏற்றி வைத்த விஜயகாந்த், அங்கு வந்த மகளிர் அணியினருக்கு இனிப்புகள் வழங்கினார்.

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., தனித்து போட்டி : கருணாநிதி
தமிழக உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., தனித்து போட்டியிடும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: தமிழக உள்ளாட்சித் தேர்தலில், அரசியல் அடிப்படையோ, கொள்கை அடிப்படையோ முன்வைக்காமல், பொதுமக்களுக்குத் தேவையான சுகாதாரம், கல்வி, சாலை, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை பொதுப்பணி குறிக்கோளாகக் கொண்டு தி.மு.க., செயல்பட உள்ளது. இதுவே, எல்லாராலும் விரும்பப்படும், ஏற்கப்படும் நிலை என்பதையும் கருத்தில் கொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கூட்டணிகளை உருவாக்குவது தேவையில்லை என்றும் தி.மு.க., முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தலில் எந்த ஒரு அணியையும் அமைக்காமல், தனித்து போட்டியிட தி.மு.க., முடிவெடுத்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, September 4, 2011
Subscribe to:
Posts (Atom)