Wednesday, January 4, 2012

ஆடுகளம், எங்கேயும் எப்போதும் படங்களுக்காக தனுஷ் - அஞ்சலிக்கு விருது!

ஆடுகளம் படத்துக்காக நடிகர் தனுஷுக்கும், எங்கேயும் எப்போதும் படத்துக்காக அஞ்சலிக்கும் சிறந்த நடிகர், நடிகைக்கான விருதுகள் புத்தாண்டு தினத்தில் வழங்கப்பட்டன.

வி4 எண்டர்டெயினர் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த நடிகர் - நடிகைகள், சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று
மாலை சேத்பட் லேடி ஆண்டாள் பள்ளியில் நடந்தது.

இயக்குநர் சந்தான பாரதிக்கு எம்ஜிஆர் விருதும், இயக்குனர் பி.வாசுவிற்கு சிவாஜி விருதும், சத்யராஜுக்கு அண்ணா விருதும், பிரபுவுக்கு பெரியார் விருதும் வழங்கப்பட்டன.

“ஆடுகளம்” படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகர் விருதை பெற்றார். “அஞ்சலி” சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். விஜய் நடித்த வேலாயுதம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. “முரண்” படத்தில் நடித்த சேரன், பிரசன்னாவும் விருது பெற்றனர். 

நடிகை சினேகா, நடிகர்கள் கரண், பார்த்திபன், இயக்குநர்கள் டி.பி.கஜேந்திரன், பாண்டியராஜன், ஏ எல் விஜய், சரவணன், வடிவுடையான், ஒய்.ஜி.மகேந்திரன், நடிகை சரண்யா, பொன்வண்ணன், இசை யமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், பாடல் ஆசிரியர்கள் வாலி, விவேகா, ஆகியோரும் விருது பெற்றனர்.

விழாவில் லட்சுமண் சுருதியின் இசையில் நடிகர் தனுஷ் கொலைவெறி பாடலை மேடையில் பாடினார். மக்கள் தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு, மௌனம் ரவி, சிங்கார வேலன், ரியாஸ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.(thatstamil)

No comments:

Post a Comment