Monday, July 2, 2012

+92, #90ல் துவங்கும் எண்களில் இருந்து மிஸ்டு கால் வந்தால் திருப்பிக் கூப்பிடாதீங்க!


உங்கள் செல்போனுக்கு +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும் நம்பரில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திருப்பி அழைக்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சிம் கார்டை குளோன் செய்து அதில் உள்ள விவரங்களைப் பெற விஷமிகள் புதிய யுத்தியை கையாளுகின்றனர். +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும் நம்பரில்
இருந்து யார் செல்போனுக்காவது விஷமிகள் மிஸ்ட் கால் கொடுக்கிறார்கள். யாரோ அழைத்துள்ளார்களே என்று நினைத்து அந்த நபரும் அந்த எண்ணை திருப்பி அழைத்தால் சிம் கார்டு குளோன் செய்யப்பட்டு சிம், மெமரி மற்றும் டேட்டா கார்டுகளில் உள்ள விவரங்களை விஷமிகள் எடுத்துவிடுகின்றனர்.
அவ்வாறு அவர்கள் மிஸ்ட் கால் கொடுக்கையில் யாரேனும் போனை எடுத்து பேசிவிட்டால் நாங்கள் கால்சென்டரில் இருந்து பேசுகிறோம். உங்கள் செல்போன் சேவை ஒழுங்காக உள்ளதா என்பதை அறியவே அழைத்தோம் என்று கூறி # 09 அல்லது # 90 என்ற எண்ணை அழுத்தி அவர்களுடைய எண்ணுக்கு அழைக்குமாறு கூறுவார்கள். அவ்வாறு நாம் அழைத்தால் நம் சிம் கார்டை குளோன் செய்து நாம் அதில் வைத்துள்ள எண்களை அழைத்து மோசடி செய்கிறார்கள்.
அதனால் இதுபோன்ற எண்களில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திரும்பி அழைக்க வேண்டாம். மேலும் செல்போனில் வங்கி கணக்கு எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்து வைக்க வேண்டாம்.
இதுபோன்று மிஸ்ட் கால் வந்த எண்ணை மீண்டும் அழைத்து சுமார் 1 லட்சம் பேர் ஏமாந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.(thanks thatstamil.com)

No comments:

Post a Comment