நடிகை டாப்சியை காதலிப்பது தொடர்பாக பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனும், நடிகருமான மனோஜ் மஞ்சுவுக்கும், மங்காத்தா மகத்திற்கும் இடையே அடிதடி நடந்துள்ளது. இதில் மகத்திற்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் டாப்சி. இவருக்கும் மங்காத்தா படத்தில் நடித்த மகத்திற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் பரவியது. டாப்சி சென்னை வருபோதெல்லாம் அவரை விமான
நிலையத்தில் இருந்து பிக்கப் செய்வது, பின்னர் இருவரும் ரகசியமாக சந்தித்து கொள்வது என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இருவருமே இதனை மறுத்தனர். இதுஒருபுறம் இருக்க மோகன் பாபுவின் மகன், மனோஜ் மஞ்சுவுடன் டாப்சி நெருங்கி பழகுவதாகவும், மனோஜும், டாப்சியும் ஒன்றாக குடித்தனம் நடத்துகிறார்கள் எனும் அளவுக்கு கடந்தவாரம் தெலுங்குப் படவுலகில் செய்திகள் றெக்கை கட்டிப் பறந்தன.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிலிம்பேர் விருது வழங்கும் விழா நடந்தது. அந்த விழா முடிந்தவுடன், சினிமா வட்டாரத்துக்கு நெருக்கமான தொழில் அதிபர் ஒருவர் தனது பிறந்தநாளையொட்டி இரவு விருந்துக்கு அழைத்தார். இதில் நடிகர்கள் மகத் மற்றும் மனோஜ் இருவரும் பங்கேற்றுள்ளனர். அப்போது டாப்சியை காதலிப்பது தொடர்பாக மகத்துக்கும், மனோஜ்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாய்பேச்சாக போய்க்கொண்டு இருந்த இவர்களது மோதல் ஒரு கட்டத்தில் அடிதடியாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கி கொண்டனர். இவர்களது சண்டையை பார்த்து விருந்துக்கு வந்தர்கள் இருவரது சண்டையையும் விலக்கி வைத்தனர்.
இதனிடையே மகத், மனோஜ் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, நடிகர் மனோஜ் என்னை தனியாக அழைத்தார். நான் அவரை அங்கேயே பார்த்தேன். அவருடன், அவரது நண்பர்கள் 3 பேரும் இருந்தனர். நான் எதிர்பாராத வகையில், மனோஜூம், அவரது நண்பர்களும், என் முகத்தில் குத்தினார்கள். என்னை கொலை செய்துவிடுவேன் என்று மனோஜ் ஆவேசமாக சத்தம் போட்டு மிரட்டினார் என்று கூறியுள்ளார்.
மகத்தின் புகார் அடிப்படையில் நடிகர் மனோஜ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.(dinamalar)

No comments:
Post a Comment