Sunday, July 29, 2012

தனுஷூக்கு ஜோடி?

களவாணி மற்றும் வாகை சூடவா புகழ் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'சொட்ட வாளைக்குட்டி'. செப்டம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்க உள்ளது. ரோமன்டிக் காதல் கதையான இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சற்குணம் இயக்கிய வாகை சூடவா படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் அமலா பால் தான். ஆனால் கால்ஷிட் பிரச்சனை காரணமானதால் படத்தில் அமலா பால் நடிக்கவில்லை. இதனையடுத்து இந்த படத்தில் அமலா பால் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பொல்லாதவன் மற்றும் ஆடுகளம் படத்தை தயாரித்த கதிரேசன் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளார்.

No comments:

Post a Comment