ஒவ்வொருவருக்கும் சருமபாதுகாப்பு என்பது அவசியமானது. சருமத்தில் ஏதாவது அலர்ஜி ஏற்பட்டாலோ, பாதிப்பு வந்தாலோ சருமநிபுணர்களின் ஆலோசனைகளை பெறவேண்டியது அவசியம். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் மட்டுமல்லாது இல்லத்தரசிகளும் தங்களின் சருமநலனின் அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும். சருமத்தில் அலர்ஜி ஏற்பட்டால் மனஅழுத்தம் உள்ளிட்ட சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளது.
சருமம் வறட்சியின்றி பளபளப்பாக இருந்தாலே ஆரோக்கியமாக இருக்கிறது
என்று அர்த்தம். பாலிவுட்,கோலிவுட்,டோலிவுட், என சினிமாவில் தற்போது கலக்கிக் கொண்டு இருப்பவர் ஹன்சிகா. இவர் அழகும் இளமையும் நிறைந்த நடிகை. சிறு வயதில் இருந்தே டி.வி சீரியல் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்து இருக்கிறார். அவரது அழகுக்கு காரணம் அவரது அம்மாதானாம். ஏனெனில் அவர் ஒரு சருமபாதுகாப்பு மருத்துவ நிபுணராம். அதுமட்டுமல்லாது ஹன்சிகாவின் உணவுப்பழக்கமும் அவரது சருமபாதுகாப்பிற்கு காரணமாக உள்ளதாம். நிம்மதியான உறக்கம்தான் தன்னுடைய சரும அழகிற்கான காரணம் என்று கூறும் அவர், அதிகமான பழங்கள்,மற்றும் காய்கறிகளை சாலடாக செய்து சாப்பிடுவாராம். அழகான, ஆரோக்கியமான சருமத்திற்கான ரகசியம் பற்றி ஹன்சிகா சொல்வதை கேளுங்களேன்.
எண்ணெயில் பொரித்த உணவுப்பண்டங்களை நான் தொடவே மாட்டேன். வீட்டில் தயாரித்த ராஜ்மா எனக்கு பிடித்தமான உணவு.
கொழுகொழு என்றிருந்த நான் திடீரென்று எடை குறைய காரணம் உடற்பயிற்சிதான். தினசரி யோகா, மெடிடேசன் செய்கிறேன். உடற்பயிற்சிக்காக இரண்டு மணிநேரம் ஒதுக்குகிறேன் என்று கூறினார்.
ஒரே நேரத்தில் உணவை போட்டு திணிப்பதை விட தினசரி 8 முறை சாப்பிடுகிறேன். ரொட்டி, பருப்பு, சாலட், யோகர்ட் போன்றவை எனது டயட். பழச்சாறுகளை தினசரி சாப்பிடுகிறேன். காலை நேரத்தில் கொழுப்பு நீக்கப்பட்ட பால், ஆப்பிள்தான் என்னுடைய உணவு. இரவு 7 மணிக்குள் என்னுடைய டின்னர் முடிந்துவிடும். லேட் நைட் டின்னருக்கு நோ சொல்லிவிடுவேன். இதுவே என்னுடைய ஆரோக்கியமான அழகின் ரகசியம் என்கிறார் ஹன்சிகா.
சருமபாதுகாப்பை பற்றி கவலைப்படும் பெண்கள் நிம்மதியாக உறங்கி ஓய்வெடுத்தாலே இறந்த செல்கள் புதுப்பிக்கப்படும். புதிய செல்கள் உற்பத்தியாகும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் காய்கறிகளையும், பழங்களையும், தொடர்ந்து உணவில் எடுத்துக்கொண்டால் பொலிவான சருமத்தை பெறலாம் என்பது உணவியல் நிபுணர்களின் அறிவுரையாகும்.*(thanks thatstamil.com)
No comments:
Post a Comment