Tuesday, July 31, 2012

கிடைத்தார் புதுக் காதலன்!


லாஸ் ஏஞ்சலெஸ்: ஏகப்பட்ட பெண்களுடன் சரமாரியாக கள்ளக்காதலில் மூழ்கித் திளைத்த அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் உட்ஸின் முன்னாள் மனைவி எலின் நார்டெகரனுக்கு புதுக் காதலர் கிடைத்துள்ளார். ஐஸ் ஹாக்கி வீரர் டக்ளஸ் முர்ரேவுடன் அவர் காதலில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
டைகர் உட்ஸைப் பிரிந்து வந்த பின்னர் அவர் தொழிலதிபர் ஜேமி டிங்மேனுடன் புது நட்பை ஏற்படுத்திக் கொண்டார். ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. இதனால்
இருவரும் பிரிந்தனர். அதே வேகத்தில் தற்போது ஐஸ் ஹாக்கி வீரரிடம் போய்விட்டார் எலின் என்பது குறிப்பிடத்தக்கது.
படு அழகான தோற்றத்தையும், உடல் வாகையும் கொண்டவர் எலின். இதனால் டைகர் உட்ஸை விட்டு அவர் பிரிந்ததுமே பலரும் அவருடன் நட்பு வைத்துக் கொள்ள முண்டியடித்தனர். இருப்பினும் உட்ஸைப் போல அவசரப்பட்டு ஒரே நேரத்தில் பலருடன் நட்பு வைத்துக் கொள்ளாமல் ஒவ்வொருவராக செலக்ட் செய்து நட்பை ஏற்படுத்தி வருகிறார் எலின் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தற்போது அவர் தேர்வு செய்துள்ள டக்ளஸ் குறித்து பலரும் ஏமாற்றம் தெரிவிக்கின்றனர். எலின் எவ்ளோ அழகு, அவருக்குப் போய் இந்த குண்டு மூஞ்சி டக்ளஸா என்று கேலி செய்கிறார்களாம். ஆனால் எலின் அதைப் பொருட்படுத்தவில்லையாம்.
2 குழந்தைகளுக்குத் தாயான எலினும், டக்ளஸும் கடந்த வாரம் ஸ்டாக்ஹோமில் உள்ள ஒரு நைட் கிளப்புக்குப் போனபோது பலரும் அவர்களை நெருக்கத்தில் பார்த்து வியந்து போனார்களாம். இருவரும் கட்டிப்பிடித்தபடியும், நெருக்கமாக உட்கார்ந்த நிலையிலும் காணப்பட்டார்களாம்.
அங்கு ஸ்வீடன் கோல்ப் வீரர் ஜெஸ்பர் பெர்ன்விக்குடன் இணைந்து டின்னர் சாப்பிட்டார்களாம்.
மூஞ்சிதான் குப்பையாக இருந்தாலும், டக்ளஸ் செம உயரமானவர். 6 அடி 3 அங்குலம் உயரமான அவர் சான்ஜோஸ் ஷார்க்ஸ் அணிக்காக ஐஸ் ஹாக்கி ஆடி வருகிறார். இவருக்கும், எலினுக்கும் 32 வயதுதான்.
டைகர் உட்ஸுடன் 5 வருடம் குடும்பம் நடத்தியவர் எலின். ஆனால் 2009ம் ஆண்டு பல்வேறு பெண்களுடன் டைகர் உட்ஸுக்கு தொடர்பு இருப்பது அடுத்தடுத்து அம்பலமானதால் அவரை விட்டுப் பிரிந்து போய் விட்டார்.
உட்ஸைப் பிரிந்த கையோடு அடுத்தடுத்து 2 முறை புதிய காதலரைத் தேடிக் கொண்டார் எலின் என்றாலும் கூட டைகர் உட்ஸ் இன்னும் சிங்கிளாகத்தான் இருக்கிறாராம்.(thatstamil.com)

No comments:

Post a Comment