Sunday, August 19, 2012

மனிதா...


  • மனிதா...
  • இதுவே உனது விதி!
  • நீ ஓட்டு போட்டதினால் வந்த சதி
  • இன்னமும் அனுபவிப்பாய் மீதி
  • மொத்தத்தில் நீ ஒரு அப்பாவி!
  • அப்பாவி மனிதனாய் இருந்துவிட்டாய்
  • ஆணி வேரையே மறந்துவிட்டாய்
  • ஓட்டு போடுவது உனக்காக
  • நீ ஒட்டு போட்டதோ பணத்திற்காக!
  • பணத்தை நம்பி ஏமாந்தாய்
  • இனி பணதிற்கெங்கு நீ போவாய்?
  • உயர்ந்ததோ விலையேற்றம்  
  • தாழ்ந்ததோ மனித முன்னேற்றம்! 
  • முன்னேறுவோம் என்று ஒட்டு போட்டாய் 
  • முன்னேறினாய் முதலில் இருந்து கடைசிக்கு!
  • கடைசிக்கு சென்றும் திருந்தாவிட்டால் 
  • நடந்ததை இனியும் மறந்துவிட்டால் 
  • காணாமல் போவாய் துரும்பும் இல்லாமல்.  

2 comments:

  1. /// முன்னேறுவோம் என்று ஒட்டு போட்டாய்
    முன்னேறினாய் முதலில் இருந்து கடைசிக்கு! ///

    உண்மை வரிகள்... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. Comment Moderation-யை எடுக்க...

    Settings-->Post and Comments-->Show word verification-->yes என்பதை No என மாற்றவும்... நன்றி...

    ReplyDelete