Monday, September 3, 2012

அரியலூர் மாவட்டம் ஒரு பார்வை


அரியலூர் மாவட்டத்தின் [Ariyalur District], தலைமையகம் அரியலூர். இம்மாவட்டத்தின் பரப்பளவு 2,033.66 சதுர.கி.மீ. ஆகும். 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 6,94,058 பேர் உள்ளனர்.

அரியலூர் மாவட்டம் [Ariyalur District], 2001-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. ஆனால் 2002-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி இம்மாவட்டத்தை, பெரம்பலூர் மாவட்டத்துடன் இனைத்துவிட்டனர். ஆனால் மீண்டும் 2007-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தை [Ariyalur District] மீண்டுமாக உருவாக்கியது. இம்மாவட்டத்தை, அதிகாரப்புர்வமான 31-வது மாவட்டமாக அறிவித்தனர்.

அரியலூர் மாவட்டத்திற்கு [Ariyalur District], வடக்கில் பெரம்பலூர் மாவட்டமும், மேற்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், தெற்கில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டமும், கிழக்கில் நாகப்பட்டினம் மாவட்டமும் உள்ளது. இம்மாவட்டம் 3 வட்டங்களாக (தாலுக்கா) பிரிக்கப்பட்டுளது. அவையாவன :

* Ariyalur Taluk   - அரியலூர் வட்டம்
* Sendurai Taluk - செந்துரை வட்டம்
* Udayarpalayam Taluk - உடையார்பாளையம் வட்டம்

அரியலூர் மாவட்டம் [Ariyalur District], சிமண்ட் மற்றும் அதை சார்ந்த தொழில்சாலைகளுக்கு மிகவும் பெயர்பெற்றதாகும். இதற்கு காரணம், இங்கு கிடைக்கும் சுன்னாம்பு கற்களாகும், இது சிமண்ட் மற்றும் அதை சார்ந்த அனைத்துக்கும்மான மூலப் பொருள் ஆகும். அரியலூரில், தமிழகத்தின் மிகவும் பெயர்பெற்ற சிமண்ட் நிறுவனங்களான :

* Arasu cements
* Birla cements
* Dalmia cements
* Sakthi cements
* Tamilnadu cements

மற்றும் பல சிமண்ட் ஆலைகளும் உள்ளது. இதன் காரணமாகவே, அரியலூர் மிகவும் பரபரப்பான போக்கு வரத்து நகரமாக உள்ளது. அது மட்டுமல்லாது, அரியலூர் மாவட்டத்தில் [Ariyalur District], பழுப்பு நிலக்கரியும் அதிகமாகவுள்ளது.

1 comment:

  1. விரிவான தகவல்கள் ஐயா... மிக்க நன்றி...

    ReplyDelete