Wednesday, September 5, 2012

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரு பார்வை


காஞ்சிபுரம் மாவட்டம் [Kanchipuram District], தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டமாகும். இம்மாவட்டத்தின் கிழக்கில் வங்காள விரிகுடாவும் [Bay Of Bengal]மேற்கில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டமும், வட்டக்கில் திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டமும், தெற்கில் விழுப்புரம் மாவட்டமும் உள்ளது. இம்மாவட்டம் 4,432  சதுர.கி.மீ. பரவியுள்ளது. இதில் 57 கி.மீ. கடற்கரை ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தின் [Kanchipuram District] தலைமையகம் காஞ்சிபுரம் ஆகும்.

காஞ்சிபுரம் மாவட்டம் [Kanchipuram District], ஒவ்வெரு ஆண்டும், 15,000 மேற்ப்பட்ட பொறியாளர்களை உருவாக்குகிறது. இது குஜராத் மாநிலதின் சம அளவாகும்.

1997-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி செங்கல்பட்டு-எம்.ஜி.ஆர் மாவட்டத்தை இரண்டாக பிரிக்கப்ட்டது. ஒன்று காஞ்சிபுரம் மாவட்டம் [Kanchipuram District], மற்றோன்று திருவள்ளூர் மாவட்டமாகும். காஞ்சிபுரம் மாவட்டம் [Kanchipuram District], 8 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுளது. அவையாவன :

* Kancheepuram    -  காஞ்சிபுரம்
* Sriperumbudur    - ஸ்ரீபெரும்புதூர்
* Uthiramerur    - உத்திரமேரூர்
* Chengalpattu    - செங்கல்பட்டு
* Tambaram    - தாம்பரம்
* Tirukalukundram    - திருக்களுக்குன்றம்
* Madrandakam    - மதுராந்தகம்
* Cheyyur    - செய்யாறு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் [Kanchipuram District], 2001-ஆம் ஆண்டு மக்கள் கணக்கேடுப்பின்படி [Census] 28,77,468 பேர் உள்ளதாகவும், இதில் 77.61% பேர் படித்தவர்களாகவும் உள்ளனர். இங்கு உள்ளவர்களில் 47% பேர் விவசாயத்தையே சார்ந்திருக்கிறார்கள். இங்கு நெல், கடலை, கரும்பு, தானியங்கள் மற்றும் சிறு தானியங்கள் பயிர் இடப்படுகிறது. மிக முக்கியமாக முந்திரி. விவசாயத்திற்கு பாலார் துனைசெய்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் [Kanchipuram District], பட்டுக்கு [Silk] மிகவும் பெயர்பெற்ற ஊர் ஆகும்.

No comments:

Post a Comment