- தமிழக அரசியலில் எதிர் கட்சிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?
- பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் வரும்போது மட்டும்தான் இருப்பதே தெரிகிறது. இன்றைய நிலவரப்படி அந்த கட்சியினால் மக்களுக்கு ஒன்றுமே புண்ணியம் இல்லாத நிலை தொடர்கிறது.
- விடுதலை சிறுத்தைகள் கலைஞரின் பிடியில் மாட்டிகொண்டு விடுதலை பெற முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறது.
- ம.தி.மு.க இருக்கிறது என்று சொன்னால் அதற்கு ஆதாரம் கேட்கும் அளவிற்கு ஆகிவிட்டது. ஒரு வகையில் அது அம்மாவின் கட்சிக்குள் ஒன்றாக மாறிவிட்டது
- அ.இ,அ.தி.மு.க ஒரு எதிர் கட்சியாக தனது கடமையை சரிவர செய்யவில்லை.
- தே.மு.தி.க. தொடங்கிய சிறிது காலத்திற்குள்ளாகவே பிரதான எதிர் கட்சியாகவே மாறி விட்டது. துடிப்புமிக்க தலைவர், துடிப்புமிக்க இளைஞ்சர்கள், எதற்கும் அஞ்சாத பேச்சு, தேவையான நேரங்களில் போராட்டம் என ஒரு எதிர் கட்சியாக சரியான வழியில் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
- இதுபோன்று நியாயமான முறையில் நடத்தப்படும் கட்சிக்கு நமது அங்கீகாரத்தை கண்டிப்பாக நாம் வழங்கியே ஆக வேண்டிய சூழ்நிலை உள்ளது.
- கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து அது வளர்ந்து கொண்டுதான் இருகிறதே தவிர அதன் வளர்ச்சி பாதிக்கப்படவில்லை. வரும் தேர்தலிலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கேப்டன் அவர்களை ஆதரிப்போம். தே.மு.தி.க வின் வெற்றியை உறுதி செய்வோம். ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என சபதம் ஏற்போம். வாழ்க தமிழ். வளர்க மக்கள்.
- மேலும் தெரிந்து கொள்ள இங்கே சுடுக்குக
Wednesday, September 29, 2010
எதிர் கட்சிகள் எப்படி?
Labels:
Political News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment