Wednesday, September 29, 2010

தொடரும் கலைஞரின் சாதனைகள்!

  • நமது முதலமைச்சருக்கு 87 வயதிலும் பதவி ஆசை ஆட்டிப்படைக்கிறது.  தமிழகத்தை தலை நிமிர வைப்பேன், சொந்த காலில் நிற்க வைப்பேன் என்றெல்லாம் சொல்லும் அவரால் தனது சொந்த காலில் நிற்க முடியவில்லை. 
  • இந்த தள்ளாத வயதிலும் பதவி ஆசை அவரை விட்டுவைக்கவில்லை.  பேசமுடியாத, நடக்கமுடியாத, சிந்திக்கமுடியாத, ஊழலை ஒழிக்க முடியாத, ரௌடிசத்தை கட்டுபடுத்த முடியாத, கலவரங்களை ஒடுக்க முடியாத, இப்படி ஒன்றுமே முடியாத ஒரு முதலமைச்சரை நாம் பெற்றிருப்பது பெருமைபடவேண்டிய ஒரு விசயமா?
  •  ஏன் கலைஞர் ஒன்றுமே செய்யவில்லையா என்று நீங்கள் கேட்க்க கூடும்
  • இலவச வண்ண தொலைகாட்சி பெட்டி,  ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி எல்லாம் தந்தார்! 
  •  இவையெல்லாம் தருவதற்கு முன்பு விலைவாசி எப்படி இருந்தது இன்று விலைவாசி எப்படி  உள்ளது என்பதை எண்ணி பார்க்க வேண்டும்! 
  • தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை தேடி தந்த அப்துல் கலாம் அவர்களை கூட அழைக்காமல் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தினார்! 
  • ஸ்டாலினை துணை முதலமைச்சராக ஆக்கி இருக்கிறார், அன்றிலிருந்து கட்சியில் இருந்து உழைக்கும் அன்பழகன் நிதி அமைச்சராகவே இருக்கிறார், ஏன் அவரை அடுத்த முதல் அமைச்சராக ஆக்க வேண்டியதுதானே? அதுதானே நியாயம்? 
  • அவருக்கு அவருடைய குடும்பம் தான் முக்கியம். 
  • மத்திய அரசால் வழங்கப்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையை ஏதோ தாணே வழங்கியது போல காட்டிகொல்வார்
  • எதிர் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் அவர்களை கேலி செய்வார் 
  • மற்ற அரசுகள் எல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டன, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டன, ஆனால் இவரோ  மின்சாரதிற்கே விடுமுறை விட்டுவிட்டார் 
  • மின்சாரம் இருக்கும் நேரத்தைவிட மின்சாரம் இல்லாத நேரம்தான் அதிகம்
  • இப்படி தொட்ட துறைகளில் எல்லாம் சாதனை படைக்க அவரால் அன்றி வேறு எவராலும் முடியாது!  

No comments:

Post a Comment