Sunday, October 17, 2010

கேள்வியும் பதிலும்-2

கேள்வி: பா.ஜ.க எங்கே?
பதில்: கண்டிப்பாக தமிழ்நாட்டில் இல்லை என நினைக்கிறேன்  
கேள்வி: M.G.R ?
பதில்: ஆ.தி.மு.க-தி.மு.க இரண்டிற்கும் தேர்தல் நேரத்தில் மட்டும் நினைவுக்கு வரும் பெயர். 
கேள்வி: அப்துல் கலாமை யாரும் கண்டுகொள்வதே இல்லையே? அவரைபற்றி  என்ன நினைகிறீர்கள்? 
பதில்:அவர் இன்று  இருட்டடிக்கப்படும் வெளிச்சமாக இருக்கிறார். 
கேள்வி: நடந்துமுடிந்த காமன்வெல்த்? 
பதில்: பங்கேற்ற வீரர்களால் இந்தியாவிற்கு பெருமை!, நடத்திய அரசாங்கத்தால் இந்தியாவிற்கு கரை. 
கேள்வி: காமன்வெல்த்தில் நடந்த ஊழல் விசாரிக்கப்படும் என்கிறாரே மன்மோகன்?
பதில்: ஊழல் நடந்ததை மறைக்கமுடியாததால் ஒப்புகொள்கிறார் போல இருக்கிறது. 
கேள்வி: மத்தியில் அதிகமாக பேசப்படும் மத்திய அமைச்சர் யார்?
பதில்: பெரம்பலூரின் ராஜா நம்ம ராஜாதான். மொத்தமாக கொள்ளை அடிப்பது எப்படி என்பதை அவர் சொல்லிதர தயார் என்றால் கோடி கணக்கில் டியூஷன் பீஸ் தர தயாராக இருக்கிறார்கள் மற்ற அமைச்சர்கள்.
கேள்வி:ஊழலில்  ராஜா மாட்டி கொள்வார் என்று நினைகிறீர்களா? 
பதில்: அவர் ஊழல்  செய்வதை நிருபித்து தண்டனை பெறும்போது நமது பேரன்களுக்கு இருப்பது வயதாவது இருக்கும். அவ்வளவு ஸ்ட்ராங் நம்ம சட்டம் .
கேள்வி: அ.தி.மு. க வினர் மதுரை கூட்டத்துக்காக தனி படை அமைத்துள்ளனரே?
பதில்: இனி மக்களும் தனி காவல்துறை அமைத்துகொள்ளவேண்டியதுதான் 
கேள்வி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது?
பதில்: ஆளும்கட்சியினருக்கு சாதகமாகவும் எதிர்கட்சியினருக்கு பாதகமாகவும் உள்ளது. 
கேள்வி: சரத்குமாரின் கட்சி என்ன ஆனது?
பதில்: மாசத்துக்கு ஒரு முறை அவர் பேட்டி தருவதை பார்த்தால் இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது?  
கேள்வி: t . ராஜேந்தர் எங்கே இருக்கிறார்? 
பதில்: தான் தொலைத்துவிட்ட இலட்சியத்தை தேடிக்கொண்டு இருக்கிறார் 
கேள்வி: அரசியலில் ரௌடிகள் பெருகிவிட்ட காரணம் என்ன?
பதில்: பணம் இருப்பவன்தான் கட்சியில் நிலைத்து  இருக்க முடியும். நல்லவன் கையில் காசு எங்கே இருக்கும். 
கேள்வி: கலை உலகினர் அடிக்கடி கலைங்கருக்கு பாராட்டு விழா நடத்துவது?
பதில்: பாம்பு மகுடிக்குதான் மயங்கும் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர் 
கேள்வி: இளைஞ்சர்கள் அரசியலுக்கு அதிகமாக வருவதில்லையே ஏன்?
பதில்: படிப்பது தொடங்கி வேலை பெரும் வரையும் அவர்களுக்கு எதிராக நடக்கும் அரசியலை முறியடிப்பதிலேயே அவர்கள் காலம் கடந்துவிடுகின்றது. அவர்கள் அரசியலுக்கு வராவிட்டாலும் சிந்தித்து ஓட்டு போட்டால் போதும் என்று தோன்றுகிறது.  பலபேர் ஒட்டு போடுவதே இல்லை.கேட்டால் அரசியல் ஒரு சாக்கடை என்கின்றனர். இப்படியே அவர்கள் ஓட்டு போடாமல் இருந்தால் தமிழ்நாடும் சாக்கடையாய் ஆஹிவிடும். 

No comments:

Post a Comment