இன்று அவரின் அழுகாச்சி "டிரைவர்கள் எட்டாம் வகுப்பு வரை படித்திருந்தால் விபத்தை பெருமளவு குறைத்துவிடலாம் என்பதே. உண்மையில் இது ஒரு நல்ல விசயம்தான். டிரைவர்களுக்கு குறைந்தபச்ச படிப்பறிவு அவசியம்தான்.
100 பேரை பாதுகாப்பாக அழைத்து செல்லும் டிரைவருக்கு கல்வித்தகுதி அவசியம்தான். கோடான கோடி மக்களை ஆளும், அவர்களை வழிநடத்தி செல்லும் அரசியல்வாதிகளுக்கு கல்வித்தகுதி அவசியம் இல்லையா? என்பதை நாம் அவரைப்பார்த்து கேட்கவேண்டி இருக்கிறது. அவருடைய இறுக்கத்தை இந்த விஷயத்தில் காட்டலாமே?
ஒரு முறை முதல்வர் பதவிக்கு வந்துவிட்டால் அடுத்த முறை அவரே தொடர்ந்து வரகூடாது என்பதிலும் கூட அவருடைய உருக்கத்தை காடாளம் அல்லவா. இந்த இரு விசயங்களும் கேட்பதற்கே எவ்வளவு நன்றாக இருக்கிறது.
டிரைவர்களிடம் அவர் எதிர்பார்க்கும் பாதுகாப்பை நாம் ஏன் நமது அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்க கூடாது? இதை மட்டும் கருணாநிதி செய்துவிட்டால் மக்கள் அவரை கடவுளாக அல்லவா பார்பார்கள்! அரசியல் விஷயத்தில் அரசியல் வாதிகளுக்கும் கல்வியறிவு அவசியமானதே. இல்லை என்று அவரால் மறுக்க முடிமா? கேட்டால் காமராஜர் நல்லாட்சி நடத்தவில்லையா அவர் எந்த கல்லூரியில் படித்தார்? என்பார். அவர் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருந்தார் இப்போதுள்ள அரசியல்வாதிகள் எவ்வளவு சொத்து வைத்திருகிறார்கள் என்பதையும் நாம் கேட்க வேண்டிஇருகிறது. அப்படி பார்கபோனால் ஏன் படிப்பறிவு இல்லாத எத்தனையோ டிரைவர்கள் ஒரு விபத்துகூட இல்லாமல் வாகனத்தை இயக்குவதில்லையா? அதனால் அவர்களுக்கு கல்வியறிவு அவசியம் இல்லை என்று சொல்லிவிடலாமா?
டிரைவர்களுக்கு கல்வியறிவு - அரசியல்வாதிகளுக்கு கல்வியறிவு இந்த இரண்டு விஷயத்தில் எது அதிக முக்கியத்துவம் என்று பார்த்தல் முதலில் அரசியல்வாதிகளுக்கு என்றே சொல்லவேண்டும். எனவே கலைஞர் அவர்கள் முதலில் அரசியல்வாதிகளுக்கு கல்வியறிவு வேண்டும் என்ற சட்டத்தை முதலில் நிறைவேத்த முன்வர வேண்டும்.
உண்மையாக அவருக்கு தமிழர்கள் மேல் பற்று இருந்தால் பாசம் இருந்தால் அவர்கள் முன்னேற வேண்டும் என்று நினைத்திருந்தால் உடனடியாக இதனை சட்டமாக நிறைவேற்ற முன்வரவேண்டும். இதுவே இந்த சிறுவனின் ஆசை.
No comments:
Post a Comment