Saturday, October 16, 2010

தங்கபதக்கம் பெற்ற தங்கங்களுக்கு பாராட்டுகள்

     இந்தியாவால் இந்த போட்டியை நடத்த முடியாது,  அவர்களுக்கு இதை சிறப்பாக நடத்த தெரியாது என்று வாய்சவடால் விட்டவர்கள் இன்று வாயடைத்து நிற்கிறார்கள்.  ஆரம்பத்தில் பல சவால்கள் சங்கடங்கள் என்று ஆரம்பித்த காமன்வெல்த் போட்டிகள் பாக்கிஸ்தான், சைனா என அனைவராலும் பாராட்டகூடிய அளவுக்கு நடந்து முடிந்துவிட்டது.  
     ஒரு வழியாக  இந்தியாவின் மானம் காப்பாத்த பட்டுவிட்டது.  ஏழ்மை, வசதியின்மை என அணைத்து தடைகளையும் முந்திக்கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர் நமது இந்திய தங்கங்கள்.  
     இங்கிலாந்தை புரட்டிபோட்டுவிட்டு இந்தியாவை இரண்டாம் இடத்தில் வைத்து அழகு பார்த்த வீரர்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.  கடைசி நாள் வரை மூன்றாம் இடத்தில் இருந்த இந்தியாவை தங்கம் வென்று முதலிடத்திற்கு கொண்டுபோன சாய்நாவை காலம் மறக்காது. 
     விளையாட்டு துறையுளும் இந்தியா அபாரமாக வளர்ந்துவருகின்றது என்று நிருபித்த இந்த காமன்வெல்த் போட்டிகள் வரலாற்றில் பொறிக்கப்படவேண்டிய ஒன்று.  
     இறுதிநாளன்று சச்சின் 200 ரன்கள் அடித்ததை கூட பொருத்துகொள்ளமுடியாத ஆஸ்திரேலியா வீரர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.  நம்மை அவமானபடுதுவதர்க்காக செய்வதாக நினைத்து அவர்களை அவர்களே அவமான படுத்திகொண்டு தாயகம் திரும்பியுள்ளனர்.
     எது எப்படியோ இதனால் நமது கௌரவம் குறைந்துவிடும் என்று நினைத்த நமது எதிரிகளை கூட வாய் விட்டு புகழ வைத்து விட்டது காமன்வெல்த். தங்கம் வென்ற அணைத்து வீரர்களையும் வாழ்த்துவோம்.   


No comments:

Post a Comment