Thursday, October 21, 2010

வலியின் ஓசை

     ஆயுரம் அ.தி.மு.க வந்தாலும் தி.மு.க வை வீழ்த்தமுடியாது என்று கூறி இருக்கிறார் கலைங்கர் அவர்கள்.  இது அவரது தலைகனத்தை காட்டுகிறது.  என்று ஒருவன் தலைகனத்துடன் பனிபுரிகிரானோ அவனுக்கு தோல்வி மட்டுமே மிஞ்சும்.  இப்பொழுதெல்லாம் கருணாநிதிக்கு தான் என்ன பேசுகிறோம் என்பதே தெரியவில்லை.  இது அவருடைய தோல்வி பயத்தை காட்டுகிறது. மேலும் இதனை அவருடைய வலியின் ஓசையாக பார்க்கலாம்.
     வழக்கமாக ஒரு எதிர்கட்சியை மட்டுமே சந்தித்து வந்த தி.மு.க விற்கு இம்முறை தே.மு.தி.க, அ.தி.மு.க, மா.தி.மு.க, பா.மா.க, கம்யுனிஸ்ட், பி.ஜே.பி என அணைத்து கட்சிகளும் எதிர்க்கட்சிகளாக மாறிவிட்டன. இருக்கும் கூட்டணியை தக்க வைத்து கொள்வதற்கே போதும் போதும் என ஆஹிவிடுகிறது.  பணத்தை அள்ளி வீசி வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்து கொண்டிருக்கும் கலைங்கருக்கு, மக்கள் மத்தியில் எதிர் கட்சிகளுக்கு கிடைக்கும் பேராதரவை பார்த்து வலி எடுக்கத்தான் செய்கிறது. எங்கே இவர்கள் ஓர் அணியில் சேர்ந்துவிடுவார்களோ என்ற பயமும் தொத்தி கொண்டு விட்டது. முக்கியமாக தே.மு.தி.க வும் அ.தி.மு.க வும் கூட்டணி வைத்தால் தனது தோல்வியை தடுக்க முடியாது என்று பயபடுகிறார் கலைங்கர், மேற்கண்ட வலிகளினால் வரும் ஓசைதான் அவரின் புலம்பல்கள்.

No comments:

Post a Comment