Tuesday, October 12, 2010

செய்தித்தாள் படியுங்கள்-விளம்பரதாள்களை அல்ல!

     தினம்தோறும் செய்தித்தாள் படிப்பது என்பது மிகவும் பயன்பாடான மற்றும் ஒரு நல்ல விஷயம்.  அது மக்களுடன் இந்த சமுதாயத்துடனான உறவை தெரிந்துகொள்ளவும் நடப்பு சமுதாய பழக்க வழக்கங்களை நம்முடன் ஒப்பிட்டு பார்த்துகொள்ளும் கருவியாகவும் உள்ளது.
     இன்று செய்திதாள்கள் செய்தியை சுமந்து வருவதை விட பக்கம் நிறைய விளம்பரத்தையும் கவர்ச்சி படங்களயும் மட்டுமே சுமந்து வருகிறது என்பது வேதனைக்குரிய விஷயம்.  இது செய்திதாள்களில் மட்டும் அல்லது மற்ற ஊடகங்களிலும் பரவிவிட்டது.  அதற்காக எல்லா பத்திரிகைகளையும் குறை கூறிவிட முடியாது.  
     எந்த செய்தித்தாள்களை எடுத்துகொண்டாலும் அந்த காலம் முதல், முதல் பக்கம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  இன்று அந்த முதல் பக்கம் முழுவதும் வியாம்பரத்தை மட்டுமே தங்கி வரும் பத்திரிகைகள் பெருத்துவருகிறது  என்பது கவலை பட கூடிய விஷயம். தினமணி போன்ற சில பத்திரிகைகள் இதிலிருந்து சற்று மாறுபட்டும் நிற்கின்றன அதற்காக அந்த சில பத்திரிகைகளை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
     சுய விளம்பரத்திற்காக சொந்தமாக பத்திரிக்கை ஆரம்பிக்கும் பழக்கம் கடந்த சில வருடங்களாக நமது அரசியல்வாதிகளிடம் அதிகமாக தொடங்கி  இருக்கிறது. எந்த கட்சியை எடுத்துகொண்டாலும் சொந்தமாக பத்திரிக்கை வைத்துள்ளன.  இவர்கள்  சொந்தமாக பத்திரிகை ஆரம்பித்த பின்புதான் நல்ல பத்திரிகைகளின் தரமும் மக்களை சென்றடையவில்லை. 
     கவர்ச்சி படம் போட்டிருக்கும் பத்திரிகையை வாங்குவதை விட மக்களின் கருத்துப்படம் போட்டிருக்கும் பத்திரிகையை மட்டுமே வாங்கவேண்டும் என்ற என்னத்தை நாம் நமக்குள் விதைத்துகொள்ளவேண்டும்.
     இந்த பதிவிற்கு முந்தய பதிவுகளில் சில பத்திரிக்கை தலையங்கங்களை பதிவுசெய்திருகிறேன் அதனை முழுமையாக படித்து பாருங்கள்.  அதிலே சமுதாய சிந்தனையும் விழிப்புணர்வும் எவளவு நிறைந்திருக்கிறது என்பது உங்களுக்கே புரியும்.  
     கவர்ச்சிப்படம் போட்டுவிட்டால் பத்திரிக்கையை  மக்கள் வாங்கிவிடுவார்கள், பணம் கொடுத்தால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்கள், லஞ்சம் கொடுத்தால் அதிகாரிகள் எதையும் செய்துதருவார்கள் என்பதெல்லாம் நமக்கு பெருமையை கொடுக்கும் விஷயம் அல்ல என்பதை முதலில் சிந்தித்து பார்க்க வேண்டும்.
     ஏற்கனவே பத்திரிக்கை வைத்திருக்கும் முதலாளிகளும்,  இனிமேல் பத்திரிக்கை ஆரம்பிக்க போகிற முதலாளிகளும் அரசியல்வாதிகளும் இனியாவது ஒரு பக்கத்திலாவது தனது சுயவிளம்பரத்தை விட்டுகொடுத்து கவர்ச்சி படத்தை விட்டுவிட்டு சமுதாய பிரச்சினைகளையும் எழுதுங்கள் என்பதே இந்த சிறியவனின் ஆசை, எதிர்பார்ப்பு, செய்வீர்களா?     -அன்பு 

No comments:

Post a Comment