Tuesday, November 23, 2010

மறந்துபோகும் மனிதாபிமானம்-1





     கோயம்புத்தூரில் சிறுவனும் சிறுமியும் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வு நம்மால் ஜீரணிக்கமுடியாதது.  பத்திரிக்கைகள் கட்டம் கட்டி செய்தி வெளியிட்ட பிறகுதான்  நமக்கு தெரியும்.  அதுபோல செய்திதாள்களில் வெளிவராத கொடுமைகள் பல உள்ளன.  அவையெல்லாம் நமக்கு தெரிவதில்லை.  நமது அக்கம் பக்கம் நடக்கும் கொடுமைகள் நமக்கு தெரிந்தும் நாம் கண்டுகொள்வதில்லை.  நமக்கு என்று வந்தால்தான் நாம் அதற்க்கு குரல்கொடுக்கவும் உதவிக்கு கைகொடுக்கவும் செய்கிறோம்.  
    இவையெல்லாம் மனிதநேயம் குறைந்துவருவதை நமக்கு உணர்த்துகின்றன.  இரக்க குணம். எதிரிக்கும் இறங்கும் பாங்கு, முழுமையான குடும்ப வாழ்கை, ஓற்றுமை இவையெல்லாம் இந்தியர்களின்  அதிலும் முக்கியமாக தமிழர்களின் அடையாளமாக கருதப்பட்டது போய் இன்று அதற்க்கு நேர்மாறான நிலையை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம்.  
     அயல்நாட்டவர்கள் நம்மைப்போல் நமது குடும்ப முறையினை கற்றுக்கொண்டு மாற நினைக்கும்- மாறிவரும் இந்த சூழ்நிலையில் நாமோ அயல்நாட்டவர்களின் வாழ்வு முறைக்கு மாற நினைக்கிறோம்.  
     நமது வாழ்வியல் முறை அதற்கான நீதி பல நாடுகளாலும் பாராட்டப்பட்டு உலக நாடுகள் நம்மை தலைநிமிர்ந்து பார்கின்றன சில நாடுகள் அத்தனை பின்பட்ட்ற வற்புறுத்துகின்றன.  அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி, என கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் தவறு ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு.  எவ்வளவு பெரிய சிக்கல்கள் வந்தாலும் முதியவர்களின் விவேகதாலும், சிறியவர்களின் வேகத்தாலும் சமாளிக்க முடிந்தது.   ஆனால் இன்றோ நிலைமை அப்படியல்ல.  தனிக்குடித்தனம் என்ற பெயரில் தனி தனியே பிரிந்து கிடக்கின்றோம்.  இதனால் நமக்கு கிடைக்கவேண்டிய பாசமும் கண்டிப்பும் நமக்கு கிடைக்காமல் போகின்றது.  பாசமும் கண்டிப்பும் இல்லாமல் வளரும் மனிதன் தான் செய்வது சரியானதா இல்லை தவறானதா என்பதை அறிய வாய்ப்பில்லாமல் போகின்றது.  அவனுக்கு அவன் செய்வதே சரியென படும் சூழ்நிலையில் தள்ளப்படுகிறான்.  
     மேற்கூறிய காரணங்கள் மட்டும் அல்லாது அளவிற்கு அதிகமான எதிர்பார்ப்பும் ஆசையும் மனிதனின் தவறுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றது.  உடனடியாக பணக்காரன் ஆகிவிடவேண்டும் மற்றவர்கள் தன்னை பார்த்து பொறாமை பட வேண்டும்  என்றெல்லாம் நினைபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க குற்ற செயல்களும் அதிகரித்துக்கொண்டே போகின்றன.  
     சாராய கடைகளும், அநாதை ஆசிரமங்களும், காவல் நிலையங்களும், முதியோர் இல்லங்களும் அதிகரிப்பது நல்ல ஒரு பண்பாடுக்கு அழகல்ல.  நாம் தற்பொழுது இந்த வளர்ச்சியை நோக்கிதான் சென்றுகொண்டிருக்கிறோம்.  இந்தியா வளர்கிறது, ஒளிர்கிறது என்று வாயளவில் நாம் சொல்லிகொண்டிருப்பதால் பயனெதுவும் கிடைக்கபோவதில்லை.  பணக்காரன் பணம் படைக்கிறான், உழைப்பாளி உழைக்கிறான் என்பதுதான் இன்றைய நிலை.  அடித்தட்டு மக்களும் முன்னேரும்போதுதான் நாடும் வளர்ச்சியடைந்ததாக அர்த்தம்.   
                                                                                               ... (நாளை தொடரும்)  - அன்பு.நெட் 

No comments:

Post a Comment