நடிகர் தனுஷ்- ஜெனிலியா நடிப்பில் உருவாகி தீபாவளி தினத்தில் ரீலிஸ் ஆன படம் உத்தமபுத்திரன். மித்ரன் ஆர்.ஜவஹர் - தனுஷ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 3வது படமான இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை என்பது ஒருபுறம் என்றால் படத்தில் இடம்பெற்ற வசனம் ஒன்று கோவை பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. படத்தில் காமெடியனாக நடித்திருக்கும் ஆபாச காமெடியன், கவுண்டர் சமூகத்தைப் பற்றி தரக்குறைவாக பேசுவதுபோல அந்த வசனம் இருந்தது. இதனால் கொதித்தெழுந்த அந்த சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சில தியேட்டர்களில் உத்தமபுத்திரன் காட்சிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் நடிகர் தனுஷ் சம்பந்தப்பட்ட வசனத்திற்காக வருத்தம் தெரிவி்த்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், எந்தவொரு சமூகத்தையும் புண்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே திட்டமிட்டு வசனங்கள் திணிக்கப்படவில்லை. எங்களை அறியாமல் அந்த வசனங்கள் இடம் பெற்று விட்டன. அது யாருடைய மனதையாவது புண்படுத்தி இருக்குமானால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். தற்போது 80 பிரிண்டுகளில் அந்த வசனம் நீக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 40 பிரிண்டுகளில் இன்னும் இரண்டு நாள்களில் அந்த வசனங்கள் நீக்கப்படும், என்றார். (dinamalar)
No comments:
Post a Comment