சென்னை: சென்னையில் நிரந்தரமாக குடியேறி, சினிமா மற்றும் டெலிவிஷன் படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறேன் என்று நடிகை சிம்ரன் கூறினார். அமரன், இதய தாமரை, கோவில்பட்டி வீரலட்சுமி ஆகிய படங்களை டைரக்ட் செய்தவர் கே.ராஜேஷ்வர். இவர், திடீர்நகரில் ஒரு காதல் கானா என்ற புதிய படத்தை டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில், அவருடைய மகன் ரஞ்சன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.படத்தின் தொடக்க விழாவிற்கு நடிகை சிம்ரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில் கே.ராஜேஷ்வர் தமிழ் சினிமாவின் சிறந்த டைரக்டர் மட்டுமல்ல. சிறந்த திரைக்கதை ஆசிரியர். சிறந்த வசனகர்த்தா. அவருடைய டைரக்ஷனில் உருவான கோவில்பட்டி வீரலட்சுமி படத்தில் நான் நன்றாக நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார் என்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், நான், தமிழில் சொந்தமாக சினிமா மற்றும் டெலிவிஷன் படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறேன். மும்பையில் இருந்துகொண்டு இந்த வேலைகளை செய்ய முடியாது என்பதால், சென்னைக்கு வந்துவிட்டேன். இங்கே நான் நிரந்தரமாக குடியேறப்போகிறேன். இதற்காக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சொந்தமாக வீடு மற்றும் அலுவலகம் கட்டி வருகிறேன். கட்டுமானப்பணிகள் இப்போது நடைபெறுகின்றன. இன்னும் 2 மாதங்களில் அந்த வேலைகள் முடிவடைந்துவிடும். அடுத்த வருட ஆரம்பத்தில், சினிமா மற்றும் டெலிவிஷன் பட தயாரிப்பு பணிகளை தொடங்கி விடுவேன்.மீண்டும் நடிப்பேன். நல்ல கதையும், கதாபாத்திரங்களும் அமைந்தால் நடிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். கே.ராஜேஷ்வர் டைரக்ட் செய்யும் புதிய படம் ஒன்றில் நடிக்க சம்மதித்து இருக்கிறேன். என்றார்.(dinamalar)
No comments:
Post a Comment