Tuesday, November 23, 2010

வெற்றி பாதையில் தே.மு.தி.க?

     தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தே.மு.தி.க உருவெடுத்து வருகிறது.  கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை குறிப்பிடத்தக்க  வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது.  கட்சி ஆரம்பித்த புதிதில்
ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கப்பட்டது.  அதில் சிலர் சரிவர அந்த பதவிக்கு பொருந்தவில்லை.  இப்போது அங்கேயும் களையெடுப்பு நடந்துகொண்டிருக்கிறது.  பொருத்தமான படித்த இளைஞ்சர்கள்  பலர் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டுகொண்டிருக்கின்றனர்.  இது கட்சியின் வளர்ச்சி பாதையை வெற்றி பாதையாக மாற்றிவருகிறது.  துடிப்புமிக்க இளைஞ்சர்கள் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
     மேலும் கட்சி தலைமையும் வெற்றி முனைப்புடன் முழுவேகத்துடன் செயல்பட்டுகொண்டிருக்கிறது.  கட்சி தொண்டர்கள் சோர்வடைந்துவிடாமல் இருப்பதற்காக அவ்வப்பொழுது பொதுக்கூட்டங்கள் , கண்டன ஆர்பாட்டங்கள் என துடிப்புடன் செயல்பட தொடங்கி இருக்கிறது தே.மு.தி.க.
     இப்பொழுது கட்சியின் கவனமெல்லாம் மாநாடு நடத்துவதில் திரும்பியுள்ளது.  இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி தனது கட்சியின் பலத்தை நிருபிக்கவேண்டுமென தலைமை விரும்புகிறது.
     எது எப்படியோ வரும் தேர்தலுக்கு தயாராகிவிட்டது தே.மு.தி.க.  கடந்த தேர்தல்களைவிட இந்த தேர்தலில் ஒரு முழுமையான வளர்ச்சியடைந்த கட்சியாக உருவாகும் என்பது உறுதியடைந்துவிட்டது.
     போக்குவரத்து சங்கங்களுக்கு நடக்கும் தேர்தலில் அ.தி.மு.க விற்கு விட்டுகொடுதுள்ள தே.மு.தி.க கூட்டணிக்கான அச்சாரத்தை போட்டுள்ளது.  எனவே கூட்டணி உறுதியாகிறது.  தனி பலத்துடன் போட்டியிட்டபோதே கணிசமான வாகுகள் வாங்கிய இந்த கட்சி, கூட்டணி பலத்துடன் களமிறங்கினால் தி.மு.க விற்கு தோல்வி நிச்சயம் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
                                                                                                                               -அன்பு.நெட்

No comments:

Post a Comment