இந்தியில் “எந்திரன்” ரிலீசுக்கு பின் ரஜினிக்கு அங்கு புதுப்பட வாய்ப்புகள் வருகின்றன. நிறைய இந்தி இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களில் நடிக்கும்படி அழைக்கின்றனர். “தூம் 3” இந்திப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கவும் அழைப்பு வந்துள்ளது. வில்லன் வேடத்தில் அவர் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் கதாநாயகனாக ஷாருக்கான் அல்லது அமீர்கான் நடிப்பார் என கூறப்படுகிறது. யாஷ் சோப்ரா தயாரிக்கிறார். அவர்தான் வில்லன் வேடத்தில் நடிக்க ரஜினியிடம் நேரில் வற்புறுத்தப் போகிறார் என்றும் இதற்காக விரைவில் அவர் சென்னை வருகிறார் என்றும் மும்பை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
யாஷ் சோப்ராவின் செய்தி தொடர்பாளரிடம் இதுபற்றி கேட்டபோது, ரஜினி மீது நாங்கள் மிகுந்த மதிப்பு வைத்துள்ளோம். அவரை வில்லன் வேடத்தில் நடிக்க வைப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. தற்போது திரைக்கதை எழுதும் பணி முழுவீச்சில் நடக்கிறது. அந்த பணிகள் முடிந்த பிறகுதான் வேறு விஷயங்கள் பற்றி யோசிப்போம் என்றார்
.thanks maalaimalar
.thanks maalaimalar
No comments:
Post a Comment