Tuesday, November 16, 2010

வளர்ச்சி திட்டங்கள் இல்லாததால் அரியலூர் மாவட்டம் பாதிப்பு!

     அரியலூர் பெயரளவில் மாவட்டமாக அறிவிக்கப்பட்டபோதிலும் அங்கு வளர்ச்சி திட்டங்கள் எதுவும் நடைபெறாததால் மற்ற மாவட்டங்களைவிட பின்தங்கியுள்ளது.  பெரம்பலூர் மாவட்டத்தில் அங்கம் வகித்த அரியலூர் தனி மாவட்டமாக
அறிவிக்கப்பட்டது.
உடனே மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கட்டிடம் கட்டப்பட்டது.
     அரியலூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டால் முன்னேறிய மாவட்டமாக மாறும் என்று நினைத்த அரியலூர் வாசிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  அரியலூர் மாவட்டத்தை பொறுத்தவரை பெருமளவில் அ.தி.மு.க வும், பா.மா.க வும் முக்கிய கட்சிகளாக உள்ளது.  இதனால்தான் இங்கு வளர்ச்சி பணிகள் வரவில்லை எனவும் பொதுமக்கள் கருதுகின்றனர்.
     இம்மாவட்ட மக்கள் சந்திக்கும் மிகபெரிய பிரச்சினையாக உள்ளது மின்சாரம்தான்.  எப்போது போகும் எப்போது வரும் என்று தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர்.  இதனால் அவர்களுடைய அன்றாட அத்தியாவசிய பணிகளும் பாதிக்கபடுகிறது.  தேளூர் மின்சார வாரியம்தான் மின்தடை அதிகம் ஏற்படுத்தி, இப்பகுதியில் மின்தடை சாதனையில் முதலிடத்தில் உள்ளது.  மின்தடை ஏற்படும்போது அப்பகுதி மக்கள் தொலைபேசியில் தகவல் அறிய முற்படும்போது அவர்கள் அதற்க்கு சரியான முறையில் பதிலளிப்பதில்லை. " வரும் ஆனா வராது"  என்று வடிவேல் கூறுவதுபோலவே அவர்களுடைய பதில் அமைந்துள்ளது. அதுவும் சில சமயம் "மின்சாரம் தர முடியாது உன்னால் என்ன பண்ண முடியும்?" என்று கேட்கும் அளவிற்கு அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.  தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரியளுறை பொறுத்தவரை இது பெருமளவில் ஆளும் தி.மு.க விற்கு பாதகமாக அமையும் என்று தெரிகிறது.
     அடுத்ததாக அரியலூர் மக்கள் சந்திக்கும் பிரச்சினை சாலை குழிகள்.  சாலை எங்கு இருக்கிறது என்று தேடும் அளவிற்கு அறியலூரின் சாலைகள் உள்ளது.  அதிலும் குறிப்பாக அறியலுரிளிருந்து  t.பழூர் செல்லும் சாலையின் நிலை மிக பரிதாபமாக உள்ளது.  இந்த சாலையின் நடுவே விக்கிரமங்கலம் சாலையில் அரசாங்க மதுபான கடை அருகே ரோட்டில் வீராணம் ஏறி போல தண்ணீர் ரோட்டில் தேங்கி விடும்.  இதானால் அந்த இடத்தில அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது அசாதாரணமான விஷயம் ஆகிவிடுகிறது.
     மூன்று நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் (விக்கிரமங்கலம்) சாலையில் தேங்கியுள்ள தண்ணீரில் குளித்து நவீன போராட்டம் நடத்தினார்.  இது அன்றைய தினமலர் நாளிதழில் வெளியானது. உடனே விழித்துக்கொண்ட அரசு அவசர அவசரமாக தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில மண்ணை கொட்டி குழியை மூடியது.  உடனே இங்கு சாலை அமைக்கப்படும் என்று அப்பகுதி மக்களிடம் உறுதி கூறப்பட்டது. அவ்வளவுதான் மறுநாள்முதல் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை.  அவர்கள் மண்ணை கொட்டி சென்றநாள் முதல் மீண்டும் மழை பெய்துவருவதால் அந்த இடம் சகதியாகி அவ்வழியே வரும் வாகனங்கள்  அதில் மாட்டிகொல்கின்றன.  இதனால் இப்போது அந்த வழியே எந்த வாகன போக்குவரத்தும் இப்போது இல்லை.  அரசாங்க பேருந்துகளும் கூட வேறு வழியாக சுற்றி வருகின்றன.
     நல்லது நடக்கும் என்ற எண்ணத்தில் போராட்டம் நடத்திய அப்பகுதி மக்கள் (விக்கிரமங்கலம்) "இருந்ததும் போச்சுடா நொள்ள கண்ணா" என்று நொந்து கொள்கின்றனர்.
     இவையெல்லாம் வரும் தேர்தலில் அரியலூர் மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கபடுகிறது.                                  
                                                                                                                     -அன்பு.நெட்

No comments:

Post a Comment