Tuesday, November 16, 2010

தே.மு.தி.க வில் தொடரும் களையெடுப்பு!

     இந்த தேர்தலில் எப்படியாவது தே.மு.தி.க பிரதான கட்சிதான் என்பதை நிருபித்து காட்டும் வகையில் அக்கட்சியில் பணிகள் தீவிரமாக நடந்துகொண்டு இருக்கிறது.  அணைத்து தொகுதிகளிலும் கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தவேண்டுமென்று கட்சி தலைமை உத்தரவிட்டிருக்கிறது.  தலைவர் கூட்டணி அமைப்பாரா
இல்லை மறுபடியும் தனியாக தேர்தலை சந்திப்பாரா என்ற குழப்பத்தில் தொண்டர்கள் உள்ளனர்.  அதுவே அவர்களுக்கு உற்சாக குறைவை ஏற்படுத்தியுள்ளது.  
     கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தினால் பதவியில் உள்ள மற்ற கட்சிகளை குறை கூறவேண்டும்.  ஆனால் யாருடன் கூட்டணி என்ற குழப்பத்தில் இருக்கும் தொண்டர்கள் யாரை தாக்கி பேசுவது?  யாருடன் சுமூகமாக போவது? என்ற குழப்பத்தில் உள்ளனர்.  
    இந்த சூழ்நிலையில் தமிழகம்  முழுவதும் தே.மு.தி.க நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டு கொண்டிருக்கின்றனர்.  இதனால் நாளை கட்சி பொறுப்பு நமது கையில் இருக்குமா இல்லையா என்ற குழப்பம் நிலவுகிறது பொறுப்பாளர்களுக்கு.  கையில் உள்ள காசை இறைத்து கண்டன ஆர்பாட்டம் பொதுக்கூட்டம் எல்லாம் நடத்திவிட்டு கடைசியில் வேறு ஒருவருக்கு பதவி போய்விட்டால் பயனில்லை என்று நினைக்கும் பொறுப்பாளர்கள் முழுமையாக கட்சி பணிகளில் தன்னை ஈடுபடுதிகொல்வதில்லை.  
     தே.மு.தே.க வின் நிலை வேறுவிதமாக உள்ளது.  கட்சி ஆரம்பித்த புதிதில் அணைத்து பொறுப்புகளும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது.  அதில் சிலர் நன்றாக கட்சிக்காக உழைத்தாலும் பல நிர்வாகிகளுக்கு அரசியல் பற்றிய விழிப்புணர்வோ அரசியல் செய்யவோ தெரியவில்லை.  அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும் அதை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.  
     இதனால் பல தொகுதிகளில் கட்சியின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளது.  இந்த தொகுதிகளில் படித்த இளைஞ்சர்கள் நிறைய ஆர்வமாக உள்ளனர்.  எனவே அவர்களுக்கு இந்த பதவிகளை கொடுப்பதன் மூலம் கட்சியில் வளர்ச்சியை அதிகபடுத்த முடியும் என்றும் இளைச்சர்களின் ஆதரவையும் பெற முடியும் என்றும் கட்சி தலைமை நினைக்கிறது.    
     இப்போது கட்சி தலைமையின் கவனம் அரியலூரில் உள்ளது.  அரியலூர் தொகுதியில் கட்சியின் வளர்ச்சி சொல்லும்படியாக இல்லை என்று தலைமை நினைக்கிறது.  எனவே வழக்கம்போல அங்கும் பெரிய அளவில் களையெடுப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அரியலூர் தொகுதியில் எல்லா கட்சிகளும் தேர்தல் பணியை இப்பவே துவங்கியும் தே.மு.தே.க சார்பில் எந்த விதமான உத்வேகமும் இல்லை.  த.பழூர் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் மாற்றபடுவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் கசிகின்றன.  அந்த பதவி ஒன்றிய கவுன்சிலர் கொளையநூர் அறிவு அவர்களிடம் வழங்கப்படும் என்று தெரிகிறது.  
    எது எப்படியோ இது பதவியை மாற்றும் நேரம் அல்ல.  இதனால் தேர்தல் பணிகள் பாதிக்கபடாமல் இருக்கவேண்டும்.  மற்ற கட்சிகளுக்கு இணையாக தே.மு.தி.க வும் தேர்தல் பணிகளில் ஈடுபடவேண்டும் என்பது கட்சி அடிமட்ட தொண்டர்களின் ஆசையாகும்.  


No comments:

Post a Comment