Friday, November 12, 2010

இரண்டாவது பெரியாராக முழங்கிய கமல்





தீபாவளி தினத்தில், சாலையெங்கும் பட்டாசு சத்தம் காதைப் பிளந்தது. பக்கத்து  வீடுகளில் இருந்து "டிவி' சத்தமும் போட்டிக்கு வந்தது. அப்படி என்ன தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அறிய, ஒவ்வொரு சேனல்களாக அழுத்தினேன். ஒரு சேனலில், கலைஞானி கமல்ஹாசன் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். மொழுமொழு ஷேவிங் போதாதென்று, மீசையையும் மழித்திருந்தார். முகத்தின் மீது விழுந்தகவனத்தை, அவரது கருத்தின் மீது திருப்பினேன்.

"ஆகா...! கமல்ஹாசன் ஒரு கலைஞானி மட்டுமல்ல... ஒரிஜினல் ஞானியும் கூட' என,உடனடி முடிவுக்கு வந்தேன். நாத்திகம் பற்றி, பகுத்தறிவுப் பகலவன்கள் எனதங்களைப் பறைசாற்றிக்கொள்ளும் தி.க., வீரமணிக்கும், தி.மு.க., தலைவருக்கும்கூட தோன்றாத கருத்துப் பெட்டகங்களைக் கடைவிரித்தார்.இந்த ஏகலைவனின் கவித் திறன் பற்றி, துரோணராக இருந்து சொல்லித் தராத தமிழகமுதல்வர் கருணாநிதி பாராட்டிப் பேசினார். அதைத் திரையில் கண்கள் பிதுங்க பார்த்தபிறகு தான், கமலஹாசன் அந்த முத்துக்களை உதிர்த்தார். நிறைய சொன்னார்.அவற்றில், என் நினைவில் நின்ற சில:
1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது,ஆபாசமானது; அர்த்தமற்றது.
2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர்.
3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக்
குடித்துக்கொள்கிறார். என்ன தப்பு?
4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர்.
இப்படியாக நீண்டன அவரது சிந்தனைச் சிதறல்கள்.

இத்தகைய புகார்களுக்கு ஏற்கனவே பல முறை பதில் அளிக்கப்பட்டுவிட்டன. எழுத்தாளர் பாலகுமாரன் கூட ஒரு முறை வாங்கு வாங்கென்று வாங்கியிருந்தார்.இருந்தாலும் கமல் விடுவதாக இல்லை. அவருடைய பகுத்தறிவுக்கு முன்னால், நம்சாதா அறிவெல்லாம் செல்லுபடியாகாது. இருந்தாலும்...
1. படுக்கையறை உணர்வுகளை எப்போதுமே மறைத்து வைக்கத் தெரியாதவர் கமல்ஹாசன். அவருடைய உணர்வுகளும், உறவுகளும் உலகறிந்த விஷயம். அப்படிப்பட்டவர், படுக்கையறை ரகசியங்களை பிறரோடு பகிர்ந்துகொள்ளக் கூடாதுஎன பேசியதே வியப்பு. இருந்தாலும், ஆத்திகவாதிகள் அதை அடக்கி வாசிக்கவேண்டும் என்றால், நாத்திகவாதி ஏன் அதைப் பற்றி, "டிவி'யில் பிரஸ்தாபிக்கிறார்?தனது நாத்திக உணர்வுகளை, தனக்குள்ளேயே வைத்திருக்க வேண்டியது தானே.இவரைப் போன்ற சிலர் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி இத்தகையபிரசாரங்களில் ஈடுபடுவதால் தான், ஆத்திகமும் பீறிட்டு எழ வேண்டியிருக்கிறது.
2. உலக நாயகனாக இன்று பரிணமித்திருக்கும் நடிகர் கமல், தனது சொந்த ஊர் எதுஎன்று கேட்டால், பரமக்குடியைத் தானே குறிப்பிடுவார்? "யாதும் ஊரே; யாவரும்கேளிர்' என தத்துவம் உதிர்ப்பாரோ. பிரபஞ்சம் முழுக்க இறைவன்
வியாபித்திருந்தாலும், தெய்வ சாந்நித்தியம் குவிந்திருக்கும் இடங்கள் என்று சிலஉண்டு. திருப்பதி அவற்றில் ஒன்று. கமலின், "மன்மதன் அன்பு' படம்வெளியாகிவிட்டால், அவரவர் இருந்த இடத்தில் இருந்தே பார்த்துவிட முடியுமா?
தியேட்டருக்குச் சென்று தானே பார்க்க வேண்டும்!
3. பெருந்தெய்வங்கள் பற்றியும், குறுந்தெய்வங்கள் பற்றியும், தெய்வ நம்பிக்கையே இல்லாத கமலுக்கு என்ன கவலை? யார், யாரைக் கும்பிட்டால் என்ன? இவர் ஏன்குறுந்தெய்வங்களுக்காக வக்காலத்து வாங்குகிறார்? அப்படி என்றால்,குறுந்தெய்வங்கள் இருப்பதை ஒப்புக்கொள்கிறாரா? இவர் குறிப்பிடுவது போல,எங்கேயாவது குறுந்தெய்வங்களுக்கு, அவமரியாதை நடந்திருக்கிறதா? அல்லது,சுடலை மாடசாமி சாராயம் குடிப்பதைப் பற்றி, பெருந்தெய்வங்களைப் போற்றும்ஆன்மிகத் தலைவர்கள் யாராவது இவரிடம் ஆதங்கப்பட்டார்களா?
4. ஆகம விதிகள் என்பது, அறிவியலை மையமாகக் கொண்டது. ஃபைவ் ஸ்டார்ஓட்டலில் ரூம் போட்டு, பலான பலான சரக்குகளோடு எழுதப்படும் திரைக்கதைபோன்றது அல்ல. அது தவிர, தங்கள் கோவில் எப்படி கட்டப்பட வேண்டும் என்பது,கோவில் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயமே தவிர,பகுத்தறிவுப் புலிகளுக்கு இதில் வேலை இல்லை. தன்னுடைய வீட்டை, என்விருப்பப்படி கட்டுவாரா? தன் விருப்பப்படி கட்டுவாரா கமல்? "ஏழைகுடிசைவாசிகளின் ஏக்கத்தைப் புறக்கணித்து, பங்களா கட்டிக்கொண்டுள்ளார் கமல்'என புகார் சொன்னால், அதை நியாயம் என்பாரா?(dinamalar)

No comments:

Post a Comment