Sunday, December 5, 2010

தெரிந்துகொள்வோம் 5 (முகமது-பின்-துக்ளக்)


     இந்தியாவை ஆண்ட அரசர்களில் முகமது பின் துக்ளக் சற்று வித்தியாசமானவர்.  கல்வியில் சிறந்து விளங்கிய  இந்த மன்னர், கொஞ்சம் கிருக்குதனமும், நிறைய கொடூரமும் கொண்டவர்.  டெல்லியில் ஆட்சி செய்து வந்த துக்க்லக்கை எதிர்த்து   அருகே குல்பர்க்கா பகுதியின் கவர்னாராக இருந்த பாவுதீன் என்பவர் பல கிளர்சிகளை செய்து வந்தார்.
     பாவுதீன் வேறு யாருமில்லை முகமது பின் துக்க்ளக்கின் அத்தை மகன்தான்.  நம்பிக்கையான நபர்களைதான் கவர்னர் பதவிகளில் நியமிப்பது அந்தகால மன்னர்களின் மரபு.  ஆனால் சில வேளைகளில் மன்னர் மிகவும் கொடூரமாக நடக்க தொடங்கினால் மன்னர் திறமையற்றவராக இருந்தால் கவர்னர்கள் மன்னருக்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக செயல்படுவார்கள்.  தான் கவர்னராக இருக்கும் பகுதியை தனி நாடாக மாற்றி ஆட்சி செய்ய முனைவார்கள்.  இதற்காக மன்னர் மீது கூட படையெடுப்பார்கள்.  பாவுதீனும் இப்படிதான் மன்னர் முகமதுபின் துக்க்ளக்கின் கெடுபிடிகளை பொருக்க முடியாமல் அவருக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கினார்.    
     கிளர்ச்சியை முறியடிக்க ஒரு பெரும் படையை குல்பர்காவிர்க்கு துக்ளக்க் அனுப்பி வைத்தார்.  மன்னரின் பெரிய படை முன்பு, கவர்னரின் சிறிய படையால் என்ன செய்ய முடியும்?  பாவுதின் படைகள் பெரும் தோல்வியை சந்தித்தது.  பாவுதினை சிறைபிடித்து டெல்லி கொண்டு சென்றனர்.
     துக்க்ளக்கின் கோவம் பொல்லாதது என்பது நாடறிந்த விஷயம்.  தன்னையே எதிர்க்க துணிந்த கவர்னருக்கு மன்னர் என்ன தண்டனை கொடுப்பாரோ என்று அரசவையே பயத்தில் நடுங்கி கொண்டிருந்தது.
     துக்க்ளக்கின் முன் கைதியாக நிறுத்தப்பட்ட பாவுதீனின் உடைகள் கழற்றப்பட்டு நிர்வானமாக்கப்பட்டார்.  கசையடிகள் தரப்பட்டன.  உடல் முழுவதும் அடிபட்ட இடங்களில் இருந்து ரதம் கொட்டியது.  குற்றுயுரும், குலை உயிருமாக கிடந்த பாவுதீனின் உடலில் இருந்து தோல் உரித்து எடுக்கப்பட்டது.  இந்நிலையிலும், கொஞ்சம் நஞ்சம் இருந்த உயிர் உடலை ஒட்டிக்கொண்டுதான் இருந்தது.
     துக்ளக் கட்டளையிட பாவுதீனின் உடல் துண்டு, துண்டாக வெட்டி கூறு போடப்பட்டது. அதன்பின் பெரிய சட்டியில் கொதிக்கும் எண்ணையில் துண்டான உடல் உறுப்புகள் போட்டு வருதெடுக்கபபட்டன.  இப்படி வறுத்தெடுத்த உறுப்புகள், சிறைபிடைகப்பட்டிருந்த பாவுதினின் மனைவி மற்றும் குழந்தைகளின் வாயில் பலவந்தமாக திணிக்கப்பட்டது.  அவர்கள் உண்டு முடிக்கும் வரை காத்திருந்த காவலர்கள் சுல்தானின் உத்தரவுப்படி உரிக்கப்பட்ட தோலுக்குள் வைக்கோல் வைத்து தைத்து கோட்டை உச்சியில் தொங்க விட்டனர். சுல்தானுக்கு எதிராக கலவரம் செய்ய நினைக்கும் ஒவ்வொருவனுக்கும் இதுதான் கதி என்று எழுதிவைத்தனர்.  சொந்த மைதுனருக்கே இந்த கதியென்றால், மற்றவர்களுக்கு என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே சுல்தானை எதிர்க்க நினைத்த அதனை பெரும் அடங்கிப்போனது குறிப்பிடத்தக்கது.  
-அன்பு.நெட்

3 comments:

 1. பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே

  www.tamilthottam.in

  ReplyDelete
 2. /// சுல்தானின் உத்தரவுப்படி உரிக்கப்பட்ட தோலுக்குள் வைக்கோல் வைத்து தைத்து கோட்டை உச்சியில் தொங்க விட்டனர்.///

  மனித தோலை தனியாக உரிக்க முடியாது மேலும் வைக்கோல் வைத்து எல்லாம் தைத்துவிட முடியாது. முகமது பின் துக்ளக்கை பற்றிய வரலாற்று பொய்களில் இதுவும் ஒன்று.

  செய்யது
  துபாய்

  ReplyDelete
  Replies
  1. இந்தியர்களை முட்டாளாக்கும் முயற்சியில் இறங்காதீர்!

   Delete