Saturday, January 8, 2011

அதிக விலைக்கு ஏலம் போன கெளதம் காம்பீர்

4வது ஐ.பி.எல் டுவண்டி-20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 8ம் தேதி முதல் மே 22ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

முதல் 3 ஐ.பி.எல். போட்டிகளுடன் இந்திய மற்றும் சர்வதேச வீரர்களுடனான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதால் அனைத்து வீரர்களும் புதியதாக ஏலம் விடப்படுகிறார்கள்.

ஒப்பந்த விதிகளை மீறியதாக கிரிக்கெட் வாரியத்தால் நீக்கப்பட்ட
ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மும்பை உயர் நீதிமன்றத்தில் தடை வாங்கிவிட்டன.

மேலும் கொச்சி மற்றும் புனே அணிகள் இந்த முறை புதியதாக போட்டிகளில் பங்கேற்கவுள்ளன.

முந்தைய சீசனில் தங்கள் அணிக்காக விளையாடிய வீரர்களில் 4 பேரை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற விதியின்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் டோணி, சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், மோர்கல் ஆகியோரையும்,

மும்பை இந்தியன்ஸ் அணி தெண்டுல்கர், ஹர்பஜன் சிங், மலிங்கா ஆகியோரையும்,

டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீரேந்திர ஷேவாக்கையும், வார்னேவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தக்க வைத்துக் கொண்டுள்ளன.

இந்த 12 வீரர்களை தவிர மற்ற 350 வீரர்கள் ஏலம் இடப்படவுள்ளன. இன்று பெங்களூரில் தொடங்கிய ஏலம் நாளையும் நடக்கவுள்ளது.

இன்றைய ஏலத்தில் கெளதம் காம்பீர் ரூ.11.04 கோடிக்கு ஏலம் போனார். அவரை நடிகர் ஷாருக் கானுக்கு சொந்தமான கொல்கத்தா அணி வாங்கியது.

இவரைத் தொடர்ந்து யூசுப் பதானையும் ரூ.9.66 கோடிக்கு இந்த அணி ஏலம் எடுத்துள்ளது.

யுவராஜ் சிங்கை புனே அணி ரூ.8.22 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ஐபிஎல் போட்டியில் முதன் முறையாக பங்கேற்றுள்ள புனே சஹாரா வாரியர்ஸ் அணி வாங்கிய முதல் வீரர் யுவராஜ் சிங் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கையின் மகிளா ஜெயவர்த்தனேவை ரூ.6.90 கோடிக்கு கொச்சி அணி வாங்கியுள்ளது. ஐபிஎல் போட்டியில் முதன் முறையாக பங்கேற்றுள்ள கொச்சி அணி வாங்கியுள்ள முதல் வீரர் ஜெயவர்த்தனே தான்.

அதே போல தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸை ரூ. 5.66 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியுள்ளது.

இந்திய வீரர் ஜகீர் கானை பெங்களூர் அணி ரூ.4.14 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த அணி இலங்கையின் திலகரத்னே தில்ஷானை ரூ.2.99 கோடிக்கு வாங்கியுள்ளது.

ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ 9.2 கோடிக்கும், ராபின் உத்தப்பாவை புனே அணி ரூ 9.66 கோடிக்கு ஏலம் எடுத்தது.

தொடர்ந்து ஏலம் நடந்து வருகிறது(thanks-thatstamil.com)

No comments:

Post a Comment