Tuesday, February 15, 2011

யாருடன் கூட்டணி?


 திருமங்கலம் அருகே, குல தெய்வம் கோவிலுக்கு, நேற்று சுவாமி தரிசனம் செய்ய வந்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கூட்டணி குறித்து கருத்து தெரிவித்தார்.

திருமங்கலம் அருகே, காங்கேய நத்தத்தில் விஜயகாந்தின் குல தெய்வமான வீர சின்னம்மாள் கோவில் உள்ளது. அரசியலில் முக்கிய முடிவுகளை அவர் எடுக்கும் முன் இங்கு
தரிசனம் செய்வது வழக்கம். நேற்று காலை விஜயகாந்த், குடும்பத்தினருடன் அங்கு சென்றார். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. அதில் அவர்கள் கலந்து கொண்டனர். பத்து நிமிடங்கள் அங்கிருந்து விட்டு மதுரை புறப்பட்டனர்.

இது குறித்து விஜயகாந்த் நிருபர்களிடம், ""ஆண்டுக்கு ஒருமுறை குல தெய்வம் கோவிலுக்கு வருவது வழக்கம். அதற்காக தான் வந்தேன்,'' என்றார். தேர்தல் கூட்டணி குறித்து கேட்ட போது,""இன்னும் முடிவு செய்யப்படவில்லை. முடிவு செய்தால் தெரியப்படுத்துவேன்,'' என்றார்.

குல தெய்வத்தை வழிபட்டார் விஜயகாந்த் : தேர்தல் கூட்டணியை அறிவிப்பார் ?தமிழக சட்டசபைக்கு வரும் மே மாதம், தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக, தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு முக்கிய கட்சிகளுமே, தங்களின் கூட்டணியை வலுப்படுத்தி தேர்தலை சந்திக்க, தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.தே.மு.தி.க., எந்த அணியில் இடம் பெறுகிறது என்பது மட்டும், இன்னும் அறிவிக்கப்படவில்லை. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பொதுக் கூட்டங்களில் பேசும்போதெல்லாம், "தி.மு.க.,வை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் இருக்க, யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேருவோம்' என, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்பதை மறைமுகமாக கட்சியினருக்கு உணர்த்தி வருகிறார்."அ.தி.மு.க.,வுடன் தான் தே.மு.தி.க., கூட்டணி அமைக்கும்' என்று அனைத்து தரப்பினராலும் வெகுவாக நம்பப்படுகிறது.

கட்சி ஆரம்பிக்கும் முன், மாநாடு நடத்தும் முன், தேர்தலில் போட்டியிடும் முன், குடும்பத்தில் முக்கிய முடிவு எடுக்கும் போதெல்லாம் விஜயகாந்த், குலதெய்வம் கோவிலுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், விஜயகாந்த், தன் மனைவி பிரேமலதாவுடன் நேற்று காலை, மதுரை திருமங்கலம் அருகிலுள்ள சாமியாநத்தத்தில் உள்ள, தன் குல தெய்வமான வீரசின்னம்மாள் கோவிலுக்கு சென்று வழிபட்டார். பிறகு, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கும் சென்றார்.இதையடுத்து, யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பை வெளியிடுவதற்காக, தன்னுடைய வழக்கப்படி குல தெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார் என, தே.மு.தி.க.,வில் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று, தே.மு.தி.க.,வினர் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்

No comments:

Post a Comment