Saturday, February 19, 2011

எம்.ஜி.ஆர். சக்திகள் ஒருங்கிணைய வேண்டும்: பண்ருட்டி ராமச்சந்திரன்


 திமுகவையும், அதன் தலைவர் கருணாநிதியையும் வெல்வதற்கு எம்.ஜி.ஆர். சக்திகள் ஒருங்கிணையவேண்டும் என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
 சாய ஆலைகள் மூடப்பட்ட பிரச்னையைக் கண்டித்து, தேமுதிக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் திருப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், அவர் பேசியது:
 சாய ஆலைகள் மூடலால் வரலாறு காணாத பிரச்னையை திருப்பூர் சந்தித்துள்ளது.
 நீதிமன்ற உத்தரவை அடுத்து மூடப்பட்ட சாயஆலைகளால் திருப்பூரில் 4.5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இப்பிரச்னை ஏற்பட்டவுடன், உடனடி தீர்வு குறித்து அரசு யோசித்திருக்க வேண்டும். ஆனால், திமுக அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை.
 நொய்யலில் சாயக் கழிவுநீர் கலக்கும் பிரச்னை திடீரென வந்ததல்ல.
 இப்பிரச்னையின் முக்கியத்துவத்தை அறிந்து ஆரம்பத்திலேயே தடுத்திருந்தால் இந்த அளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது.
 இதேபோல் மீனவர் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை என தமிழகத்தின் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காணப்படவில்லை. எந்த வளமும் இல்லாத சிங்கப்பூரை நோக்கி எல்லா வளமும் பெற்ற இந்திய மக்கள் வேலை தேடிச் செல்லும் அவலம் தொடர்கிறது. தேர்ந்தெடுக்கக் கூடாதவர்களை நாட்டு மக்கள் தேர்வு செய்ததே இதற்குக் காரணம்.
 காமராஜர், ராஜாஜி போன்ற தலைவர்கள் வாழ்ந்த நாட்டில் இன்று ஊழல் பெருகிவிட்டது. ஊழல்வாதிகளை மேலும் ஆட்சியில் அமர்த்துவது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் துரோகம். தற்போதைய நிலைக்கு மாற்றம் கொண்டுவர மக்கள் சிந்திக்க வேண்டும்.
 எம்ஜிஆர் இருந்தவரை கருணாநிதியால் ஆட்சியில் அமர முடியவில்லை. அதேநிலை மீண்டும் ஏற்பட, எம்ஜிஆர் சக்திகள் ஒருங்கிணைய வேண்டும். அதற்கு, எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியும் (அதிமுக), எம்ஜிஆரின் உண்மை விசுவாசியின் (விஜயகாந்த்) கட்சியும் ஒருங்கிணைய வேண்டும். அப்போதுதான் திருப்பூர் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்றா
ர்

No comments:

Post a Comment