Sunday, February 20, 2011

கச்சத்தீவுக்கு சென்று போராட்டம்! தேமுதிக அறிவிப்பு


 உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க.,வினர், மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில் சாயல்குடியில் பொதுக்கூட்டம் நடத்தினர்.
கூட்டத்தில் ஆளும்கட்சியை சரமாரியாக விமர்ச்சித்த சிங்கை ஜின்னாவை
கூட்டம் முடிந்தவுடன் காவல்துறையினர் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக கூறி சிங்கை ஜின்னா உட்பட 50  தேமுதிகவினர் மீது வழக்குபதிவு செய்தனர்.  இதனால், அதிர்ச்சியடைந்த தே.மு.தி.க.,வினர், காவல்துறையினரை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து பேசிய மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா,காவல்துறையினரிடம் முறையான அனுமதி பெற்று கூட்டம் நடத்திய போது, ஆளும் கட்சியின் தூண்டுதலால், எங்கள் கட்சியினர் மீது காவல்துறையினரே பொய் வழக்குபோடுகின்றனர்.பொது மக்களுக்காகவும் மீனவர்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும்நிலையில், இதுபோன்ற பொய்வழக்குகளை போட்டு எங்களை முடங்க செய்யப் பார்க்கின்றனர். இதை நாங்கள் இன்னும் தைரியத்துடன் போராட முடிவு செய்துள்ளோம்.
அதற்காக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு உத்தரவு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம். தலைவரின் அனுமதி கிடைத்தவுடன் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்களை திரட்டி கொண்டு 50 படகுகளில் கச்சத்தீவு சென்று, அங்கு இலங்கை கடற்படையினரை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டு கொள்ளாத தமிழக அரசை கண்டித்தும் போராட்டம் நடத்த உள்ளோம்’’ என்று தெரிவித்தார்

No comments:

Post a Comment