கொழும்பு, ஏப்.16- இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் இலங்கை வீரர்களை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிட்டிருப்பது நியாயமற்றது என்று பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கூறி்யுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"வீரர்களை மே 20-ம் தேதி நாடு திரும்புமாறு முதலில் கூறிய இலங்கை கிரிக்கெட் வாரியம், திடீரென உடனடியாக திரும்பி வருமாறு அழைத்திருப்பது நியாயமற்ற செயல்." என்று முரளிதரன் கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
"இத்தகைய அறிவிப்பு இந்தியா-இலங்கை இடையேயான கிரிக்கெட் உறவை பாதிக்கும். இதனால் இலங்கை அணிக்கு பல்வேறு வழிகளில் நஷ்டம் வரலாம். எனவே, இப்பிரச்னையை மிகவும் கவனமுடன் அணுக வேண்டும்." என்றும் முரளிதரன் கூறியுள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரான முரளிதரன், டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment