Tuesday, November 22, 2011

லட்சுமனின் பொறுமையான ஆட்டத்திற்கு காரணம் என்ன?

 பேட்டிங்கில் இறங்குவதற்கு முன்பு, தன்னை ஆயத்தப்படுத்த 45 நிமிடங்கள் எடுத்து கொள்கிறார் விவிஎஸ் லட்சுமன். இதனால்தான் அவர் பொறுமையாக, நிதானமாக, பதட்டமில்லாமல்
ஆடி ரன் குவிக்கிறார்வதால் என்று இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான வீரேந்திர ஷேவாக் தெரிவித்தார்.

மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா அரங்கில் 'சியட்' சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ள இந்திய அதிரடி பேட்ஸ்மேன் ஷேவாகிற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. மேலும் இந்திய வீரர் லட்சுமனுக்கு, இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய சேவை என்ற விருது வழங்கப்பட்டது.

அப்போது முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் மேடையி்ல் இருந்த ஷேவாக்கிடம், லட்சுமனின் பொறுமைக்கான காரணம் குறித்து கேட்டார்.

அதற்கு பதிலளித்த ஷேவாக் கூறியதாவது,

இந்திய அணியில் 5வது பேட்ஸ்மேனாக லட்சுமன் களமிறங்குவதால், அவருக்கு போதுமான நேரம் கிடைக்கிறது. போட்டியில் விளையாட செல்லும் முன் 2 முறை ஷவர் குளியல் போட்டுவிடுவார். பின்னர் பூஜைகளை செய்துவிட்டு சில பயிற்சிகளை செய்வார். இதற்கு குறைந்தது 45 நிமிடங்களாவது லட்சுமன் செலவழிப்பார்.

அ ந்த நேரத்தில் அவரது உடல் மற்றும் மனம் போட்டியில் விளையாட தயாராகிவிடும். இதனால் தான் லட்சுமன் பொறுமையாகவே காணப்படுகிறார்.

வீரர்கள் அறையில் சகவீரர்களிடம், தனது மனதில் படும் கருத்துகளை அப்படியே கூறும் பண்பை கொண்டவர் லட்சுமன். லட்சுமனைப் போன்ற நண்பர்கள் கிடைப்பது அதிஷ்டம் தான். லட்சுமன் உடன் ஸ்லீப்பில் பீல்டிங் செய்ய எனக்கு மிகவும் பிடிக்கும்.

கடந்த 2001ம் ஆண்டு செளரவ் கங்குலி கேப்டனாக இருந்தபோது, என்னை துவக்க ஆட்டக்காரராக களமிறங்க அறிவுறுத்தினர். அப்போது என்னிடம் வந்த லட்சுமன், துவக்க வீரராக களமிறங்க வேண்டாம். துவக்க ஆட்டக்காரராக இறங்க நான் ஒப்புக் கொண்டதால் தான் இன்று இப்படி இருக்கிறேன். உன் கிரிக்கெட் தரம் இழக்காமல் இருக்க, அதற்கு ஓப்புக் கொள்ள வேண்டாம் என்று அறிவுரை கூறினார்.

அதற்கு பதிலளித்த நான், தற்போது எனக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. துவக்க வீரராக களமிறங்கி வெற்றிப் பெற்றால் நல்லது. இல்லையெனில் மிடில்-ஆடரில் உங்களுக்கு போட்டியாக களமிறங்குகிறேன், என்று கூறினேன், என்றார்.

விருதை வழங்கிய போது உங்களுக்கு வழங்கப்பட்ட காசோலையை, லட்சுமனுக்கு வழங்கிவிடுங்கள், என்று கவாஸ்கர் கிண்டலாக கூறினார். அதற்கு பதிலளித்த ஷேவாக், லட்சுமனுக்கு தகுந்த முறையி்ல் செலவு செய்ய தெரியாது. எனவே அந்த காசோலையை என்னிடமே கொடுத்து விடுங்கள், என்றார்.

சியட் விருது வழங்கும் விழாவில், சிறந்த வீரர் மற்றும் பேட்ஸ்மேன் விருதை இங்கிலாந்தின் டிராட் பெற்றார். இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு இளம் வீரர் விருதும், ரெய்னாவுக்கு டுவென்டி-20' வீரர் விருதும், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் வால்ஷ்சுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment