Tuesday, June 21, 2011

கண்ணீர் விட்ட கருணாநிதி!


தன் மகள் கனிமொழியை, தி.மு.க., தலைவர் கருணாநிதி டில்லி, திகார் சிறையில் சந்தித்து, கண்ணீர் மல்க ஆறுதல் தெரிவித்தார். கனிமொழியை கண்டதும், தன் கறுப்புக் கண்ணாடியை கழற்றிவிட்டு பார்த்தபோது, கண்ணிலிருந்து, தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது. கனிமொழியை தனியாக

Monday, June 6, 2011

தேசிய சொத்து!

கலாமின் இணைய முகவரிக்கு செல்ல இங்கே சுடுக்குக!

கலாமின் கனவுகளுக்கு வலுசேர்க்க வாரீர்!

 நாட்டின் மிகப்பெரிய வியாதியாக உள்ள ஊழலை ஒழிக்க, இளைஞர்கள் இயக்கத்தை துவக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.
விழுப்புரத்தில் சமூக நல கூட்டமைப்புகள் சார்பில் 2020ல், விழுப்புரத்தின் முன்னேற்றம் என்ற தலைப்பில் (லீடு விழுப்புரம் 2020) நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: விழுப்புரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, "லீடு விழுப்புரம் 2020' திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்துவது சிறப்பம்சம். இத்திட்டத்தின் மூலம், 6.5 கோடி மரக்கன்றுகளை நட்டு சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் செயல், பாராட்டத்தக்கது. ஒவ்வொரு மரமும், ஓராண்டில் 20 கிலோ கிராம் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி அழிக்கிறது;

Wednesday, June 1, 2011

பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல்


 ரிஷிவந்தியத்தில், நன்றி தெரிவிக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் வாகனத்தை வழிமறித்து, பொதுமக்கள் பிரச்னை செய்த சம்பவத்தால், கட்சியினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவருக்கான அரசு சார்பில் வழங்கப்படும் கூடுதல் பாதுகாப்பை அவர் ஏற்க வேண்டும் என, தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில், எம்.எல்.ஏ.,வாக தே.மு.தி.க.,