Thursday, January 5, 2012

மிஸ்டு காலா? 'மிஸ்' பண்ணுங்க, இல்லாவிட்டால் பணம் போய்விடும்!

 வெளிநாட்டு எண்களில் இருந்து செல்போன்களுக்கு ‘மிஸ்டு கால்' கால்கள் வந்தால், அந்த எண்ணை திரும்ப அழைக்க வேண்டாம் என செல்போன் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. இதனால் நுகர்வோரின் பணம் பறிபோய்விடும் என்பதால் மிஸ்டுகால்களை அழைப்பதில் எச்சரிக்கைத் தேவை என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்பது பழமொழி ஆனால் செல்போன்
இல்லாத மனிதன் செல்லாக்காசு என்பது புதுமொழியாகிவருகிறது. அந்த அளவிற்கு தற்போது செல்போன் இன்றிமையாத ஒன்றாகிவிட்டது. 

சராசரி மனிதன் தன்னுடைய இல்லத்திற்கு அன்றாட தேவையான சமையலுக்கு வாங்கித்தர பணம் இருக்கிறதோ இல்லையோ செல்போன் ரீசார்ஜ் செய்வது அன்றாட வாடிக்கையாக வைத்துள்ளான். இந்த செல்போன்கள் மூலம் நன்மைகள் பல இருந்தாலும் தீமைகள் பல உள்ளது. அதே வேளையில் நுகர்வோரை பணம் பறிக்க புது புது திட்டங்களையும். கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் காட்டி செல்போன் நிறுவனங்கள் பணம் பறிப்பதிலேயே குறியாக உள்ளனர். சில நிறுவனங்கள் மிஸ்டு கால் மற்றும் அழைப்பை துண்டித்தாலோ பணத்தை காலி செய்கின்றனர் இது ஒரு வணிக மோசடியே. 

பெண் குரலில் பேசி மோசடி 

இதையெல்லாம் விட பெண்ணின் குரலில் பேசி பணத்தை கறக்கும் வேலையும் நடைபெறுகிறது. தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவன செல்போனில் 239,243,246,960 போன்ற எண்களில் இருந்து மிஸ்டு கால் வரும். மிஸ்டுகாலை திரும்ப அழைத்தால் அழகான குரலில் பெண் கடலை போடுவார். மூன்று நிமிடம் பேசினால் பணம் அனைத்தும் காலிதான்.

இது ஒரு புறமிருக்க மெசேஜ் ஒன்று வரும். அதில் இரத்தம் தேவை. இந்த மெசேஜை பத்து பேருக்கு பார்வடு செய்தால் உங்களுக்கு போனசாக 100 ரூபாய் தரப்படும் என கூறி பேலன்சை காலி செய்யும் நிலையும் உள்ளது. 

இது சம்பந்தமாக விளக்கம் அளித்த தொலைத் தொடர்புத்துறை உயர்அதிகாரி ஒருவர், ஆப்ரிக்கா, லிபியா, மலேசியா, தைவான் போன்ற நாடுகளில் ஒரு கும்பல் பணம் பறிக்க இந்த வேலையை செய்கிறார்கள். இதனை கண்டுபிடிப்பது சிரமம். அவர்களுடன் நெட்வொர்க் அமைத்து பணம் பறிக்கின்றனர். என விளக்கம் அளித்திருக்கிறார். 

நிறுவனம் எச்சரிக்கை

தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசங்களில் உள்ள சில செல்போன்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக இதுபோன்ற ‘மிஸ்டு கால்'கள் வந்ததாகவும், அந்த எண்களுடன் திரும்ப தொடர்பு கொண்ட வாடிக்கையாளர்களுக்கு பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், வோடோ போன் நிறுவன பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார்.

வாடிக்கையாளர்களிடம் இருந்து இதுபோன்று வந்த புகார்கள் குறித்து அந்த நிறுவனம் விசாரித்து வருவதாக கூறிய அவர், அதுபோன்ற அழைப்புகளை பொருட்படுத்தி மீண்டும் தொடர்பு கொண்டு பேச வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். இனி மேல் மிஸ்டு கால் வந்தால் மறக்காம மிஸ் பண்ணிடுங்க சரியா!.(thatstamil)

No comments:

Post a Comment