Monday, July 23, 2012

பிரணாப் முகர்ஜியின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா...?


 நாட்டின் 13வது குடியரசுத் தலைவராக உருவெடுத்துள்ள பிரணாப் முகர்ஜிக்கு ஏகப்பட்ட சலுகைகள் காததிருக்கின்றன. அவருக்கு இனி மாதந்தோறும் ரூ. 1.50 லட்சம் சம்பளமாக கிடைக்கும்.
உலகிலேயே மிகப் பெரிய ஜனாதிபதி மாளிகை என்ற பெருமை படைத்தது ராஷ்டிபதி பவன். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மாளிகைதான் இனி பிரணாப் முகர்ஜியின் வீடு. சாதாரண கிராமத்திலிருந்து தனது புத்திசாலித்தனம், உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றால் இந்த நிலைக்கு உயர்ந்து சாதனை படைத்துள்ளார் பிரணாப் முகர்ஜி.
பிரணாப் முகர்ஜி முதல் முறையாக எம்.பி. ஆனபோது அவரைப் பார்க்க ஊரிலிருந்து
வந்திருந்த அவரது அக்காள், பிரணாப் பங்களாவுக்கு சற்று தூரே தெரிந்த ராஷ்டிரபதி பவனைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவாராம். நீயும் ஒரு நாளைக்கு அங்கு போய் அமருவியா என்று கேட்பாராம். இப்போது அவரது கனவு நிறைவேறி விட்டது.
குடியரசுத் தலைவராகியுள்ள பிரணாப் முகர்ஜிக்கு இனி பல்வேறு சலுகைகள், வசதிகள் கிடைக்கும். அவருடைய மாதச் சம்பளம் ரூ.1.50 லட்சமாகும். அவர் குடியேறப் போகும் ராஷ்டிரபதி பவன் மாளிகையில் மொத்தம் 340 அறைகள் உள்ளன. உலகின் மிகப் பெரிய வீடுகளில் இதுவும் ஒன்று.
பிரணாப் முகர்ஜியைக் கவனித்துக் கொள்வதற்காக ராஷ்டிரபதி பவனில் 200 பணியாளர்கள் காத்துள்ளனர்.
ராஷ்டிரபதி பவன் தவிர சிம்லா, ஹைதராபாத்தில் குடியரசுத் தலைவருக்காக சிறப்பு ஓய்வில்லங்கள் உள்ளன.
குடியரசுத் தலைவருக்கு அதி நவீன மெர்சிடிஸ் பென்ஸ் கார் தரப்படும். இந்தக் காரை பிரதீபா பாட்டீல் காலத்தில்தான் பெரும் விலை கொடுத்து வாங்கினர். இதன் மதிப்பு ரூ. 12 கோடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட பிரணாபுக்கு பல சலுகைகள் கிடைக்கும். அதாவது ஓய்வூதியமாக ரூ. 75,000 கிடைககும். இலவசத் தொலைபேசி வசதிகள், செல்போன் வசதியும் கிடைக்கும். அவர் விரும்பும் இடத்தில் மிகப் பெரிய வசதியுடன் கூடிய பங்களா தரப்படும். அங்கு வாடகை இல்லாமல் தனது வாழ்நாள் முழுவதும் அவர் வசிக்கலாம்.
தனிச் செயலாளர் கிடைக்கும், 5 பணியாளர்கள் தரப்படுவர். வேலையாட்களுக்கு வருடத்திற்கு ரூ. 60,000 சம்பளம் தரப்படும். கார் தரப்படும். இந்தியா முழுவதும் இலவசமாக ரயில், விமான பயணங்களை அவர் எத்தனை முறை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.
இப்படிச் சலுகைகள் ஏகப்பட்டது இருந்தாலும், இந்தியாவின் முதல் குடிமகன் என்பதுதான் நிச்சயம் பிரணாபுக்கு பெருமையானதாக, பெரிதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.(thanks thatstamil)

1 comment:

  1. மாதந்தோறும் ரூ. 1.50 லட்சம்... யம்மாடி..
    340 அறைகள், 200 பணியாளர்கள் ஓய்வூதியம்-ரூ. 75,௦௦௦௦௦௦000 தலை சுத்துது சாமீ... ஹா... ஹா...
    வாழ்க பாரதம்...
    நன்றி.
    என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

    ReplyDelete