Wednesday, July 25, 2012

யுடியூப்பில் இனி உண்மையான பெயரை வெளியிட வேண்டும்!


கூகுளின் பொழுதுபோக்குத் தளமான யுடியூப்புக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்களும் உறுப்பினர்களும் உள்ளனர். இந்த யுடியூப்பில் நினைக்கும் வீடியோக்களைப் பதிவேற்றம் செய்யலாம். மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களைப் பார்க்கலாம். அவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். மேலும் அந்த வீடியோக்களுக்கு விமர்சனங்களும் எழுதலாம்.
ஒவ்வொரு நாளும் யுடியூப்பில் ஏராளமானோர் வீடியோக்களைப் பதிவேற்ற் செய்கின்றனர். அவ்வாறு பதிவேற்றம் செய்யும் போது ஒரு சிலர் தங்களது உண்மையான பெயர்களைக் குறிப்பிடுகின்றனர். ஆனால் பெரும்பாலோர் தங்களது புனைப் பெயர்களையேத் தருகின்றனர்.
மேலும் யுடியூப்பில் வரும் வீடியோக்களில் பெரும்பாலானவை ஆபாசமானதாகவும், அர்த்தமற்றதாகவும்,
இனவெறியைத் தூண்டுவதாகவும் உள்ளதாக ஏராளமான விமர்சனங்கள் வருகின்றன. இந்த வீடியோக்கள் பெரும்பாலும் புனைப் பெயர்களில் வருவதால் இதை பதிவேற்றம் செய்தவர்களைக் கண்டுபிடிப்பதும் கடினமாக இருக்கிறது.
ஆகவே தரமில்லாத மற்றும் அர்த்தமற்ற வீடியோக்களைக் களைய வேண்டும் என்பதற்காக கூகுள் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இனி யுடியூப்பில் எந்த வீடியோவை பதிவேற்றம் செய்தாலும் பதிவேற்றம் செய்பவர்கள் தங்களது உண்மையான பெயர்களைக் குறிப்பிட வேண்டும்.
மேலும் வீடியோக்களுக்கு விமர்சனம் எழுதுபவர்களும் தங்களது உண்மையான பெயர்களையே குறிப்பிட வேண்டும் என்று கூகுள் அறிவித்திருக்கிறது. அதற்காக அவர்கள் குகூள்+ல் சைன் அப் செய்ய வேண்டும்.
அவ்வாறு தங்களது உண்மையான பெயர்களை வெளியிட விரும்பாதவர்கள் ஒரு சில வாய்ப்புகளையும் வழங்குகின்றன. அதில் அவர்கள் தங்களுது பெயர்களை வெளியிடாததற்கான காரணங்களை அவர்கள் வெளியிட வேண்டியிருக்கும்.
இந்த அறிவிப்பின் மூலம் யுடியூப்பில் வீடியோக்களை வெளியிடுபவரைப் பற்றி கூகுள் அறிந்து கொள்ள விரும்புகிறது. மேலும் வரும் காலங்களில் யுடியூப்பில் பதிவேற்ற பெயரைக் குறிப்பிட வேண்டியது கண்டிப்பாகிவிடும் என்று தெரிகிறது.
எவ்வாறு பேஸ்புக்கில் உறுப்பினர்கள் தங்களது உண்மையான பெயர்களைக் குறிப்பிடுகிறார்களோ அதுபோன்றே யுடியூப்பிலும் நிகழ வேண்டும் என்று கூகுள் விரும்புகிறது. அது நடக்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.(thatstamil.com)
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments:

Post a Comment