காணாமல் போனதாக கடந்த பல மாதங்களாக தேடப்பட்டு வரும் இந்தி நடிகை லைலா கான் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாக லஷ்கர் தீவிரவாதி, காஷ்மீர் போலீசில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2008&ம் ஆண்டு வெளியான ‘வபா’ இந்தி படத்தில் பழம்பெரும் நடிகர் ராஜேஷ் கன்னாவுடன் நடித்தவர் லைலா கான். இவரது நிஜ பெயர் ரேஷ்மா படேல். மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இகத்புரி என்ற இடத்தில் பண்ணை வீடு கட்டி வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் இவர் மர்மமான முறையில் காணாமல் போனார். பல இடங்களில் தேடியும்
கிடைக்காததால் இதுகுறித்து அவரது தந்தை நதிர் படேல் போலீசில் புகார் செய்தார்.
லைலா கானுக்கு வங்கதேச தீவிரவாதி முனிர் கான் மூலமாக லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி பர்வேஸ் இக்பால் தக் என்பவர் அறிமுகமானார். லைலா குடும்பத்தினருடன் பர்வேஸ் நெருங்கி பழகினார்.
இதற்கிடையில், டெல்லி ஐகோர்ட்டில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் லைலாவுக்கு பங்கு இருப்பதாக போலீசார் கருதினர். அவர்கள் நடத்திய விசாரணையில் லைலா கானுக்கும் தீவிரவாதிகள் சிலருக்கும் தொடர்பு இருக்கும் தகவல் அம்பலமானது. பின்னர் இந்த வழக்கை தீவிரவாத தடுப்பு குழுவினர் விசாரிக்க தொடங்கினர். இதற்கிடையில் லைலா துபாய் சென்று விட்டதாக சிலர் கூறினர். இதை அவரது தந்தை மறுத்து வந்தார். ஆனாலும், லைலா என்ன ஆனார் என்பது மர்மமாகவே இருந்தது. கடைசியாக நாசிக் மாவட்டத்தில் அவர் செல்போனில் பேசியது தெரிய வந்தது.
இந்நிலையில், ஒரு வழக்கு தொடர்பாக லஷ்கர் தீவிரவாதி பர்வேஸ் இக்பால் தக், காஷ்மீர் போலீசில் பிடிபட்டார். அவரிடம் காஷ்மீர் டிஐஜி கரீப் தாஸ் தீவிர விசாரணை நடத்தினார். லைலா கான் மாயமானது தொடர்பாகவும் விசாரித்தனர். அப்போது, ‘லைலா கான், அவரது அம்மா மற்றும் நண்பர் ஆகியோர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்’ என்ற திடுக்கிடும் தகவலை தக் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி டிஐஜி தாஸ் கூறும்போது, ‘லைலா கான் உள்ளிட்டவர்கள் கொல்லப்பட்டதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் 3 பேரின் உடல்களும் இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்த பிறகுதான் எந்த முடிவுக்கும் வரமுடியும். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.(thanks dinakaran)

No comments:
Post a Comment