Friday, September 28, 2012

ஈரோடு மாவட்டம் ஒரு பார்வை


ஈரோடு மாவட்டம் [Erode District], தமிழகத்தின் வடமாவட்டம் ஆகும். இதன் தலைமையகம் ஈரோடு. 1996 வரை ஈரோடு மாவட்டம், பெரியார் மாவட்டம் எனப்பட்டது. அப்போது அது கோயம்பத்தூர் [Coimbatore District] மாவட்டத்தின் ஒரு அங்கமாக இருந்தது. ஈரோட்டில் தந்தை பெரியார் [E.V.Ramasamy] மற்றும் கணிதவியல் வல்லுநர் ராமாணுஜம் [Ramanujan] பிறந்த இடமாகும்.

ஈரோடு மாவட்டத்தில் [Erode District] 25,81,500 பேர் இருப்பதாக மக்கள் தொகை கணக்கு எடுப்பு 2001 தெரிவிக்கிறது. இதில் 75.51%  பேர் படித்தவர்கள். இன்னும் இந்த விகிதம் உயர்ந்து கொண்டு இருக்கிறது.
ஈரோடு [Erode District] மாவட்டத்தின் வடக்கில் கர்நாடகத்தின் சாம்ராஜ் மாவட்டம் [Chamarajanagar district], கிழக்கில் காவிரி  ஆறு. காவிரி ஆற்றின் கரை ஓரமாக இருப்பது சேலம், நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டம். திருப்பூர் மாவட்டம் தெற்கு பக்கமும், கோயம்பத்துர் மற்றும் நீலகிரி மாவட்டம் மேற்கு பக்கமும் உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் [Erode District] மூன்று பெரிய ஆறுகள் உள்ளது. காவிரி ஆற்றின் கிளை ஆறுகளகிய பவானி ஆறு, நொய்யல் ஆறு மற்றும் அமராவதி ஆறு. முக்கியமாக பாலாறு வடக்கிலும், வடமலைக்கரை ஓடை மற்றும் உப்பாறு தென்பகுதியிலும் உள்ளது. பாலாறு ஈரோடு மாவட்டத்திற்கும் கர்நாடகத்திற்கும் வடக்கில் எல்லையாக அமைந்துள்ளது. பவானிசாகர் அனை விவசாயத்திற்க்கு மிகவும் இன்றியமையாததாகும்.
ஈரோடு மாவட்டம் [Erode District] 5 தாலுக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.

* Erode - ஈரோடு
* Gobichettipalayam - கோபிசெட்டிபாளையம்
* Bhavani - பவானி
* Perundurai - பெருந்துரை
* Sathyamangalam - சத்தியமங்கலம்

தமிழ்நாட்டில், ஈரோடு 5-வது பெரிய மாநகராட்சி ஆகும்.

ஈரோடு மாவட்டத்தில் [Erode District] 4 நகராட்சிகள் உண்டு.

* Gobichettipalayam - கோபிசெட்டிபாளையம்
* Bhavani - பவானி
* Punjai Puliampatti - புஞ்சை புளியம்பட்டி
* Sathyamangalam - சத்தியமங்கலம்

1 comment: