Saturday, October 16, 2010

கேள்வியும் பதிலும்-1

கேள்வி: ஜனநாயகம் தழைத்து ஒங்க தி.மு.க. விற்கு ஒட்டு போடுங்கள் என்கிறாரே கலைஞர்?
பதில்: அது ஜனநாயகம் அல்ல பணநாயகம். வாய் தவறி சொல்லிருப்பார். 
கேள்வி: பா.மா.க யாரை கூட்டணியில் சேர்த்துக்கொள்ளும்?
பதில்: அவர்களை யார் சேர்த்து கொள்கிறார்களோ அவர்களுடன் தான். 
கேள்வி: ராஜபக்சே இந்திய வருகை பற்றி?
பதில்: இதுவரை  தமிழர்கள் தலையில் துண்டை போட்டார்கள், இப்போது போர்வைதான்!
கேள்வி: இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
பதில்: "தேர்தல்" நடந்தால் எதிர்கட்சிக்கு, இப்போதெல்லாம் ஓட்டுபோட நாம் போகவேண்டியதில்லயாம் அவர்களே போட்டுகொல்கிரார்கலாம் தெரியாதா? தமிழர்களை கஷ்டபடுத்தி பழக்கம் இல்லை கருணாநிதிக்கு.  
கேள்வி: விலைவாசி  உயர்வு பற்றி?
பதில்:  இப்போதெல்லாம் கட்சி நடத்துவதற்கு நிறைய பணம் செலவாகின்றது. எதிர் கட்சி m .l .a -வை  வாங்கவே கஜானா பத்தவில்லை. அடுத்த தேர்தலுக்கு உங்களுக்கு கொடுக்க பணம்?
கேள்வி: வைகோ?
பதில்: போர் என்று ஒன்று நடந்தாலே அப்பாவி மக்கள் கொள்ளபடதான் செய்வார்கள் என்று சொன்ன அம்மையாரிடம் இருந்துகொண்டு ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுத்தால் யார் கேட்பது?
கேள்வி: ஒபாமா இந்தியாவை அதிகமாக புகழ்கிறாரே?
பதில்: தேர்தல் நேரத்தில் கலைஞர் ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுப்பதில்லையா? 
கேள்வி: மதுரை மாநாடு பற்றி?
பதில்: என்னை பொறுத்தவரை அம்மையார் இந்த முறையாவது மக்களை நம்பாமல் 5 வட்டிக்கு கடன் வாங்கியாவது செலவு செய்தால் அரசியல் தொழிலை தொடரலாம்
கேள்வி: அ.தி.மு.க-தே.மு.தி.க கூட்டணி வருமா?
பதில்: வரவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. அ.தி.மு.க வின் எதிர்பார்ப்பும் அதுதான். வரவிடுவாரா கலைஞர்? 
கேள்வி: இந்தமுறையும் தி.மு.க ஆட்சிக்கு வந்தால்?
பதில்: தமிழ்நாட்டில் தமிழர்கள் "இலவசமாக" தற்கொலை செய்துகொள்ளலாம்.(விலைவாசி அப்படி ஆகிவிடும் ) 
                                                                                                                          நாளை தொடரும்......

No comments:

Post a Comment