Monday, October 18, 2010

வருத்தெடுத்த ஜெயலலிதா!

     நேற்று மதுரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்தில் கருணாநிதியையும் அவருடைய ஆட்சியையும் கடுமையாக வருத்தெடுதார் ஜெயலலிதா. மதுரையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று அம்மையார் கூறிய நாளிலிருந்து அ.தி.மு.க தொண்டர்கள்  உற்சாகம் அடைந்தனர். கடந்த ஒரு வாரமாக கண்டன ஆர்பாடதிர்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.  
    வழக்கம் போல நேற்று மாலை 4 மணியிலிருந்து மதுரை முழுவதும் கருணாநிதியின்  புண்ணியத்தால் மின்சாரம் நிறுத்தப்பட்டது. எதிர் கட்சி தலைவர்கள் எங்கு கூட்டம் போட்டாலும் இது தொடர்கிறது. "இன்று பவரை கட் செய்தவர்களின் பவரை வரும் தேர்தலில் நீங்கள் கட் செய்யுங்கள்" என்று கூறினார் ஜெயா. 
     கூட்டணி பற்றி பேசிய ஜெயா ஒரு கதையை சுட்டி காட்டி விளக்கினார். ஒரு ஊறில் பாலம் கட்ட முடிவு செய்தனர் ஊர் மக்கள். அதற்காக ஒரு பொறியாளரை கொண்டு மிகவும் சிரமப்பட்டு கட்டிமுடித்தனர். கட்டி முடித்ததும் முதலில் ஒரு லாரியை அனுப்பி அதிலே வெள்ளோட்டம் விட தயாரானார்கள். அப்போது பொறியாளர் இந்த பாலத்தின் மேல் 50௦ டன் எடையுடன் மட்டும்தான் எந்த வாகனமும் செல்ல முடியும். மேலே ஒரு குண்டுமணி எடை கூடினாலும் அந்த பாலம் இடிந்துவிடும் என்றார். மக்களும் அதை ஒப்புக்கொண்டு லாரியை சரியான எடையுடன் அனுப்பினர். பாதி பாலம் சென்ற வண்டியின் மீது 5 பறவைகள் வந்து உற்காந்து கொண்டன. இதனால் லாரியின் எடை அதிகரிதுவிட்டதே என்று மக்கள் மிகவும் பயந்துவிட்டனர். ஆனால் லாரி பாலத்தை கடந்துவந்துவிட்டது. அப்போது மக்கள் அந்த பொறியாளரை பார்த்து ஒரு குண்டுமணி எடை அதிகரித்தாலும் பாலம் இடிந்துவிடும் என்று கூறினீர்கள் ஆனால் அப்படி ஆகவில்லையே என்று கேட்டனர். அதற்க்கு பொறியாளர் ஆமாம் நான்தான் கூறினேன் லாரி பாதி பாலத்தை கடந்து வருவதற்கு தேவையான டீசல் தீர்ந்துவிட்டது அதனால் லாரியின் எடை குறைந்துவிட்டது இன்னும் இரண்டு மூன்று பறவைகள் உக்கார்ந்தாலும் அதனால் பாதிப்பில்லை என்று கூறினார். மக்கள் புரிந்துகொண்டனர். இந்த கதையில் வரும் பொறியாளராக நான் கூட்டணியை கட்டி வருகின்றேன். கண்டிப்பாக நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும். தி.மு.க ஆட்சியை விட்டு அகற்றப்படும் என்று கூறினார் ஜெயலலிதா.
     மேலும் மதுரையை சீரழித்து வரும் ஒரு தீய சக்தி நான் ஜெயித்தவுடன் மதுரையை விட்டு அகற்றப்படும் என்று அழகிரியை பெயர் குரிபிடாமல் பேசிய ஜெயலிதா வாக்குறுதி அளித்தார். 
     கடல் அலையென கூடி இருந்த கூட்டத்தில் கருணாநிதியை வருத்தேடுதார் ஜெயலிதா. 
     நேற்று மாலை மதுரை சென்ற தி.மு.க அமைச்சர் நெப்போலியன் கார் அ.தி.மு.க தொண்டர்களால் தாக்கப்பட்டதாக தி.மு.க தரப்பில் கூறப்பட்டது. வேறு எந்த கலவரமும் இல்லாமல் சிறப்பாக நடந்து முடிந்தது மதுரை கூட்டம். 

No comments:

Post a Comment