Thursday, October 21, 2010

விஜயகாந்த் சூசகம்

 ""ஆட்சியாளர்கள், பிரேக் இல்லாத வாகனத்தை நிதானம் இல்லாமல் இயக்கி விட்டனர். இனி அந்த வாகனத்தை அவர்களே நினைத்தாலும் நிறுத்த முடியாது. அது கவிழ்ந்து, விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவது உறுதி, '' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.


விழுப்புரம் மாவட்டத்தில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் அக்கட்சியில் நேற்று இணைந்தனர். கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் விஜயகாந்த் பேசியதாவது: எனக்கு என்ன கொள்கை இருக்கிறது என்று கேட்டு மரியாதை குறைவாக பேசுகின்றனர். மக்களின் வறுமையை ஒழித்து வருமானத்திற்கு வழிசெய்வதுதான் எனது கொள்கை. நீங்கள் போடா என்றால் நானும் போடா என்பேன்; வாடா என்றால் நானும் வாடா என்பேன். காரணம் எனக்கு பயம் கிடையாது.


புதிதாக கட்சி ஆரம்பித்து நான் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேன் என்கின்றனர். முதல்வர் பதவிக்கு நான் ஆசைப்படுவது சத்தியமாக, வாஸ்தவம் தான். ஆனால், துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரியால் அதை தைரியமாக கூற முடியுமா? அணையப்போகும் விளக்குதான் சுடர் விட்டு எரியும். காமன்வெல்த் போட்டி மூலம் கல்மாடி 8,000 கோடி ரூபாய் ஊழல் செய்தார், ஐ.பி.எல்., கிரிக்கெட் மூலம் லலித்மோடி 470 கோடி ரூபாய் ஊழல் செய்தார் என்கின்றனர்.இதிலிருந்தே இந்தியாவை ஊழல்வாதிகள் ஆளுகின்றனர் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.


மக்களுக்கு இலவச "டிவி', காஸ் அடுப்பு, அரிசி கொடுத்து விட்டால் வறுமை ஒழிந்து விடாது. அவர்களின் வருமானத்திற்கு வழி செய்தால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும். அதற்காக நல்ல பல திட்டங்களை சிந்தித்து கொண்டு இருக்கிறேன். இலவசங்கள் கொடுத்ததை சாதனை என்று கூறுபவர்கள், ஓட்டுக்கு நோட்டு கொடுப்பது வேதனையாக இருக்கிறது. அவர்கள் கோடி கோடியாக சொத்து சேர்த்து இருப்பதால் நோட்டுக்களை கொடுக்கின்றனர்.


ஆட்சியாளர்கள் "பிரேக்' இல்லாத வாகனத்தை நிதானம் இல்லாமல் இயக்கி விட்டார்கள். இனி அந்த வண்டியை அவர்களே நிறுத்தினாலும் நிறுத்த முடியாது. விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவது உறுதி. பா.ஜ., ஆட்சி நடக்கும் மாநிலங்களில் ஊழல் நடக்கவில்லை. மற்ற மாநிலங்களில் தான் ஊழல் தலை விரித்தாடுகிறது என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறுவது உண்மை. நான், பா.ஜ.,வை பற்றி பேசினால் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளப்போகிறேன் என்பார்கள். நான் மக்களுடனும், தெய்வத்துடனும் மட்டும் தான் கூட்டணி வைப்பேன். தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. நாட்கள் நெருங்கும் நேரத்தில் அதை பார்த்துக்கொள்வேன். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

2 comments:

  1. இளமாறன், தமிழ்நாடு,

    ஆமாம், திரு‍ விஜயகாந்த் அவர்களுக்கு‍ என்ன கொள்கை இருக்கிறது. கட்சி ஆரம்பித்தவுடன்,உடனே முதல் அமைச்சராக வேண்டும், என்ற தீரா (பேர்)ஆசை. மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த எம்.ஜி.யார் கூட படி‍ படியாக வளர்ந்த பிறகு‍ தான் முதல் அமைச்சராக வேண்டு‍ம் என்ற ஆசை உண்டானது. ஆனால் விஜயகாந்தோ, இன்று‍ மக்களுடன் தான் கூட்டணி என்பார், அதே சமயத்தில், ஆதிமுக வுடன் பின்புறம் பேசுவார், காங்கிரேசுடன் மறைமுகமாக பேசுவார், பாமாக, காங்கிரேஸ் மற்ற கட்சிகளுடன் இணைந்து‍ மூன்றாவது‍ அணி என்பார், ஆனால், எங்கும் இவருக்கு‍ வேகவில்லை, ஏன் என்றால்,முதல் அமைச்சர் பதவி இவருக்கு‍ இல்லை என்பதால், தற்போது‍ பாஜாக வுடன் பேச்சு. இவருக்கு‍ கொள்கையும் இல்லை, வெட்கமும் இல்லை. இவர் கட்சியில் நின்ற ஜெயித்த உள்ளாட்சி உறுபினர்கள் எவரேனும் சாதனை செய்து‍ இருக்கிறார்களா, கட்சி மாறியது‍ தான் மிச்சம். இவராவது‍ தனது‍ தொகுதிக்கு‍ ஏதாவது‍ செய்தாரா,.... இவர் கட்சி்யில் இருப்பவர்கள், புதியதாக அரசியலுக்கு‍ வந்தவர்களா, இல்லையே, அணைவரும் மற்ற கட்சியின் dropout க்கள் தான்,முதலில் மக்களுக்கு‍ நண்மை செய்யட்டும், இலங்கை தமிழ்ர்கள், விடுதலை புலிகளுக்கு‍ ஆதரவாக பேசினால் எங்கே காங்கிரேஸின் கூட்டணி கிட்டாமல் போய் விடுமோ என்ற பயம். விடுதலை புலிகளின் மேல் உள்ள அபிமானத்தில் தான் தன் பிள்ளைக்கு‍ பிரபாகரன் என்று‍ பெயர் வைத்ததாக கூறும் இவர் விடுதலை புலிகளுக்கு‍ தடை நீடிக்க நடக்கும் நடுவர் விசாரனையில் கலந்து‍ கொண்டு‍ இவர் கருத்தை தெரிவிக்காத இவர் ஒரு‍ வேஷதாரி, தமில், தமிலர் என்று‍ அடி‍க்கடி குரல் கொடுப்பார், இப்படி‍ இருக்கையில், மற்றவரை பற்றி பேசும் அருகதை துளி கூட‍ இவருக்கு‍ இல்‌லை.

    ReplyDelete
  2. yes yea it is correct.Not only himself no political parties in tamil nadu has a solid policy except DMK.JJ spend all of her time in attacking MKS family.She should explain first what she will do if her party won the election.I dont why this crowd of ppl going behind this barbarian women who doesnot know even to give a moral and dewcent speech.

    ReplyDelete