Sunday, October 31, 2010

அன்பு தமிழர்களே- உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!

     நம் தமிழ்நாடு 1953 வரை ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களும் இணைந்து, "சென்னை தலைமாநிலம் என்ற பெயருடன் இருந்தது.  ஆந்திரர்களுக்கென தனிமாநிலம் கோரி ஆந்திரத்தின் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாநோன்பு இருந்து உயிர் நீத்தார்.  அது பெரும் கிளர்ச்சியாய் வெடித்தது.  உடனே இந்திய அரசு, கர்நூலை தலைனகரமாககொண்டு 11 மாவட்டங்கள் இணைந்த ஆந்திர மாநிலத்தை 1953 அன்று அமைத்தது.  1956 நவம்பர் முதல் நாள் மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொது சென்னை தலைமாநிலம் ஆந்திரம், கருநாடகம், கேரளம், சென்னை மாநிலம் என நான்கு மாநிலங்களாக பிரிந்தது.
     அன்று தமிழகம் கண்டுகொள்ளாமல் புறக்கணித்த காரணத்தினால் வடவேங்கட மாலவன் குன்றமாகிய திருப்பதியுடன் சித்தூர், புத்தூர், கண்ணப்ப நாயனார் பிறந்த திருக்காளத்தி, புங்கனூர், காகுந்தி, பலமநெறி போன்ற தமிழ் பகுதிகளையும் சேர்த்து ஆந்திரத்திடம்  இழந்தோம்.  வெங்காலூர் கோலார், கொள்ளேகாலம் போன்ற தமிழ் பகுதிகளை கருநாடகத்திடம் இழந்தோம்.  பாலக்காடு, மூனாறு, தேவிகுளம், பீர்மேடு, உடும்ம்பன்சோலை, நெய்யாற்றின் கரை, நெடுமாங்காடு, செங்கூட்டையின் பாதி, கொச்சின், சித்தூர் போன்ற தமிழ் பகுதிகளை  கேரளத்திடம் இழந்தோம்.
     தெலுங்கர்கள் தங்கள் மாநிலத்தை ஹைதராபாத்  மாநிலம் என்று கூறாமல் ஆந்திர மாநிலம் என்றே அழைத்து உரிமை பாராட்டினர்.  அது இப்போது தெலுங்கு தேசமாயுற்று.  கன்னடர்கள் தங்கள் மாநிலத்திற்கு பெங்களூர் மாநிலம் என்று பெயர் வைக்காமல் கருநாடக மாநிலம் என்றே பெயர் வைத்துள்ளனர்.  அதேபோல மலையாளிகள் தங்கள் மாநிலத்திற்கு திருவனந்தபுரம் என்று பெயர் வைக்காமல் கேரளா மாநிலம் என்றே பெயர் வைத்துள்ளனர்.  தமிழர்களாகிய நாமோ தமிழ் மாநிலம் என்ற பெயரை கருதிகூட பார்க்காமல் சென்னை ராஜ்ஜியம் என்றே விட்டு வைத்தோம்.
     அதைமாற்றி இதற்க்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று கூறி, அறுபது மூன்று நாள் உண்ணா நோன்பிருந்த தியாகி சங்கரளிங்கநாரை செத்தால் சாகட்டும் என்று விட்டுவிட்டு அன்றைய தமிழகம் செயலற்று கிடந்தது.  அவரும் கோரிக்கை நிறைவேறாமல் செத்து மடிந்தார்.  வரலாற்று திருப்பத்தில் 1969 ஜனவரி 14 அன்று தமிழர் திருநாளாகிய பொங்கலன்று அன்றைய தமிழக முதல்வர் அண்ணா அவர்கள் நம் மண்ணுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூடினார்.
     இப்போது நம் மாநிலம் தமிழ் மக்கள் வாழும் தமிழ் மாநிலம் என்னும் நிலையை இழந்து, பல மொழி மக்களும் உரிமை கொண்டாடும் மாநிலமாகி இழிநிலையை அடைந்துள்ளது.  பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் நாங்கள் இத்தனை விழுக்காடு இருக்கிறோம் எனவே எங்கள் மொழிக்கு உரிய இடம் வேண்டும் என்று உரிமை கொண்டாடி தலையெடுக்கும் போக்கு உருவாகியுள்ளது.  மதராஸ் மனதே என்று சென்னையிலே கூடி தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் தெளுகர்கள். கன்னியாகுமரியை கேரளா மாநிலதூடு சேர்க்க வேண்டும் என்று கூக்குரலிடுகிறார்கள்  மலையாளிகள்.  நீலகிரி பகுதி தங்களுக்கே  உரியது என்று  கூப்பாடு போடுகிறார்கள் கன்னடர்கள்.  இதை பார்த்தும் பார்க்காத அவல நிலைக்கு நாம் ஆளாகி உள்ளோம்.  .
     வீடு விற்பனைக்கு- மார்வாடிகளுக்கு மட்டும் என்று அறிவிப்பு பலகை வைக்கும் அளவுக்கு உரிமைகள் பறிக்க பட்டிருக்கிறோம்.  கன்னடம் படித்த கன்னடர்களுக்கே வேலை என்று கருநாடக அரசு அரசானை பிறப்பித்து உள்ளதுபோல் ஒவ்வொரு மொழியினரும் விழிப்பு அடைந்துள்ள இவ்வேளையில் தமிழ்வழி பயின்ற தமிழர்களுக்கே வேலை என்று தமிழ்நாட்டில் ஆணை பிரப்பிக்க  இல்லாத நிலை இங்கு மட்டுமே.
     இந்த வரலாறும், நிலையும் தெரியாத இன்றைய இளைய தலைமுறையோ மொழி கொலை செய்யும் திரைப்பட பாடல்களை பாடிக்கொண்டு பொறுப்பு அற்றவர்களின் பின்னால்  போய்கொண்டிருக்கிறது.  பொறுபேற்க வேண்டியவர்களோ தன்னல கனவுகளில் தம்மை இழந்தனர்.  தமிழுக்கும், தமிழனுக்கும் தமிழ்நாடுக்கும் ஆற்ற வேண்டிய தம் கடமைகளையும் அறவே மறந்தனர். விழிப்பை துறந்தனர். தமிழகத்தின் இந்த தூக்கத்தை கலைக்க வேண்டும் தமிழை ஆட்சிமொழி, கல்விமொழி, தொடர்பு மொழி, நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழி, இசைமொழி என அணைத்து துறைகளிலும் அரியணை ஏற்ற  வேண்டும்.  வருங்கால தமிழ் இனத்தினரின்  உரிமைகளை பாதுகாத்து வைக்க வேண்டும்.
    

No comments:

Post a Comment