Saturday, October 30, 2010
தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?-நீதிபதிகள் கண்டனம்
மூன்றாம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீடு முறையில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கு நேற்று நீதிபதியின் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் நேற்று நீதிபதிகள் காட்டமான கருத்துக்களை கூறினார். "மத்திய அமைச்சர் ராஜாவின் மீது ஊழல் புகார் விசரனைக்குவந்து பலவருடம் ஆஹிவிட்டது ஆனால் அவர் இன்னமும் அமைச்சராகவே நீடிக்கிறார். இதுதான் சட்டத்தின் ஆட்சியா? அவர் இன்னமும் பதவி விலகாததற்கு காரணம் என்ன?" என்று நீதிபதிகள் சராமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
வீடுகட்டுவதில் நடந்த ஊழல் விவகாரதிர்க்கே பதவி விலக முன்வந்துள்ளார் மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான். ஆனால் பல ஆயுரம் கோடி அரசாங்கத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி அதன் மூலம் கொள்ளையடித்த ராஜாவையோ இன்று தமிழக அரசு போற்றி பாதுகாத்துவருகிறது. இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதைதான் நீதிமன்றமும் கருத்துகளாக பதிவுசெய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் ராஜா பதவி விலக வேண்டும் என்பதையே விரும்புவதாக தெரிகிறது. எனினும் ஊழலின் பிதாமகன் கலைங்கர்தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததுபோல் நீதிமன்றத்துக்கு தெரியவில்லை போலும்.
கலைஞர் இனியாவது நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவேண்டும் இல்லையேல் மக்கள் மன்றம் அவருக்கு சரியான தீர்ப்பை வழங்கிவிடும் என்பது நிதர்சனமான உண்மை.
Labels:
Political News
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by a blog administrator.
ReplyDelete